Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொத்து குவிப்பு வழக்கு : சேடப்பட்டி முத்தையா விடுதலை!

Webdunia
வியாழன், 20 நவம்பர் 2008 (04:34 IST)
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சட்டப்பேரவை முன்னாள் தலைவர் சேடப்பட்டி முத்தையா, அவரது மகன்கள், மகளுக்கு சென்னை தனி நீதிமன்றம் விதித்திருந்த தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது!

வருமானத்திற்கு அதிகமாக 45 லட்சத்து 74 ஆயிரம் ரூபா‌ய் சொத்து சேர்த்ததாக சேடப்பட்டி முத்தையா, அவரது மனைவி சகுந்தலா, மகன்கள் அறிவழகன், மணிமாறன், மகள் மலர்விழி ஆகியோர் மீது கடந்த தி.மு.க. ஆட்சியில் வழக்கு தொடரப்பட ்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை தனி நீதிமன்றம், சேடப்பட்டி முத்தையாவின் மனைவி சகுந்தலாவை விடுதலை செய்தும், சேடப்பட்டி முத்தையா, அவரது மகன்களுக்கு 25 மாதம் சிறைத் தண்டனையும், மகள் மலர்விழிக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் விதித்து 2000 ஆ‌ம் ஆ‌ண்டு தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் நேற்று தீர்ப்பளித்தார்.

தனது வருமானத்திற்கான ஆதாரத்தை சேடப்பட்டி முத்தையா நிரூபித்துள்ளார். அவரது பினாமிகளாக மகன்கள், மகள் இருந்தனர் என்பதற்கான எந்த சாட்சியமும் இல்லை. சாட்சியத்தை தனி நீதிமன்றம் நிராகரித்தது தவறு. அவரது மகன்கள், மகள் வருமானத்திற்கான சொந்த ஆதாரம் காட்டப்பட்டுள்ளது. சேடப்பட்ட முத்தையா குற்றம் புரிய இவர்கள் உடந்தையாக இருந்தனர் என்பதற்கு எந்த சாட்சியத்தையும் அரசு தரப்பு காட்டவில்லை. சந்தேகத்திற்கு இடமின்றி குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டது. எனவே நால்வருக்கும் விதிக்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்படுவதாக நீதிபதி கிருஷஷன் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

Show comments