Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்துக்கட்சி கூட்டம் : பா.ம.க., ம.‌தி.மு.க. பங்கேற்பு!

Webdunia
திங்கள், 17 நவம்பர் 2008 (14:43 IST)
இல‌ங்கை த‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை‌யி‌ல் அடு‌த்த க‌ட்ட நடவடி‌க்கை கு‌றி‌த்து ஆலோ‌சி‌ப்பத‌ற்காக இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌‌ஸ்‌ட் க‌ட்‌சி கூ‌ட்டியு‌ள்ள அனை‌த்து‌க் க‌ட்‌சி கூ‌ட்ட‌த்‌தி‌ல் பா.ம.க., ம.‌தி.மு.க. உ‌ள்‌ளி‌ட்ட க‌ட்‌சிக‌ள் கல‌ந்து கொ‌ண்டன.

இலங்கையில் போர் நிறுத்தம் கிடையாது என்று அந்நாட்டு அதிபர் ராஜபக்சே திட்டவட்டமாக அறிவித்துள்ளதையடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ‌விவா‌தி‌க்க அனைத்து கட்சி கூட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டியுள்ளது.

சென்னை தி.நகரில் உள்ள சாகித்தியன் ஓட்டலில் இந்த கூட்டம் நட‌ந்து வரு‌கிறது. இதில் கலந்து கொள்ளுமாறு அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பப‌ட்டிரு‌ந்தது.

இ‌ன்று காலை 11ம‌ணியள‌வி‌ல் கூட்டம் தொடங்கியதும் ‌சி‌றில‌ங்க ராணுவ‌த்‌தி‌ன் க‌ண்மூடி‌த்தனமாக தாக்குதலுக்கு உ‌ள்ளா‌கி பலியான அ‌ப்பா‌வி‌த் தமிழர்களுக்கு இரங்கல் தெரிவித்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கூட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் மாநில செயலர் தா.பாண்டியன் தலைமை தாங்கினார்.

இந்திய கம ்ய ூனிஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் மத்திய கட்டுப்பாட்டு தலைவர் நல்லக்கண்ணு, துணை செயலர் பழனிசாமி, தமிழர் தேசிய இயக்கம் தலைவர் பழ.நெடுமாறன், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, ம.தி.மு.க. துணை பொதுச் செயலர் மல்லை சத்யா, சமத்துவ மக்கள் கட்சி பொதுச் செயலர் கரு.நாகராஜன், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, லட்சிய தி.மு.க. பொதுச் செயலர் டி.ராஜேந்தர் உ‌ள்‌ளி‌ட்ட தலைவ‌ர்க‌ள், ப‌ல்வேறு அமை‌ப்புகளை‌ச் சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள் கல‌ந்து கொ‌ண்டன‌ர்.

மேலு‌ம், தேசிய லீக் மாநில தலைவர் பஷீர் அகமது, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேதுராமன், தமிழர் தேசிய விடுதலை இயக்க தலைவர் தியாகு, பெரியார் திராவிடக்கழக பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன், தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் அப்துல்சமது, இந்திய தேசியலீக் தலைவர் இனாயதுல்லா, இந்திய குடியரசு கட்சி சார்பில் சாந்த மூர்த்தி, மறு மலர்ச்சி மக்கள் தமிழகம் தலைவர் துரை அரசன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தி.மு.க., அ.இ. அ.தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ ்‌ ட் கம்யூனிஸ ்‌ ட், பாரதீய ஜனத ா, தே.மு.தி.க., ஆகிய முக்கிய கட்சிகள் ப‌ங்கே‌ற்க‌வி‌ல்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments