Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிதம்பரத்தில் அ.இ.அ‌.‌தி.மு.க. 17இ‌ல் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் : ஜெயல‌லிதா அ‌றி‌வி‌ப்பு!

Webdunia
சனி, 15 நவம்பர் 2008 (11:52 IST)
மி‌ன்வெ‌ட்டை‌க் க‌ண்டி‌த்து‌ம், அடி‌ப்படை வச‌‌திகளை ‌நிறைவே‌ற்ற வ‌லியுறு‌த்‌தி‌‌‌யு‌ம், ‌‌சித‌ம்பர‌த்‌தி‌ல் வரு‌ம் 17ஆ‌ம் தே‌தி அ.இ.அ.‌தி.மு.க. சா‌ர்‌பி‌ல் க‌ண்டன ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நடைபெறு‌ம ் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்த ு‌ள்ளா‌ர ்.

இதுகு‌‌றி‌த்து அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில ், " கடலூர் மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ஏரி நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வந்தது. கடந்த 30 மாத கால த ி. ம ு.க. ஆட்சியில் பராமரிப்பின்மை காரணமாக வெலிங்டன் ஏரி பாலத்தின் அடித்தளம் உடைந்து எந்த நேரத்தில் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சநிலை தற்போது நிலவுகிறது.

இது தவிர, கால்வாய்களில் நீர்வரத்து பாதிக்கப்படுவதால் விவசாயிகள் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். வெலிங்டன் ஏரியை சீரமைக்க 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாக த ி. ம ு.க. அரசு அறிவித்தும், அதற்கான பணிகள் இதுநாள் வரையிலும் துவங்கப்படவில்லை. த ி. ம ு.க. அரசின் காகிதத் திட்டங்களில் இதுவும் ஒன்றோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் தற்போது எழுந்துள்ளது.

இதேபோன்று 40 லட்சம் ரூபாய் செலவில் கடலூர் மாவட்டம், பெண்ணாடம் பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டும் இதுவரை பயன்படுத்தப்படாததால் அது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளதோடு, வடலூர் முதல் சேத்தியாதோப்பு வரையிலான சாலை, விருத்தாசலம் முதல் திட்டக்குடி வரையிலான சாலை உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலைகளும் பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக இருப்பதால் மக்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை அங்கு நிலவுகிறது.

அதேபோல், மாவட்டத்தில் நிலவி வரும் கடும் மின்வெட்டின் காரணமாக சிறு மற்றும் குறுந்தொழில்கள், கைத்தறி நெசவாளர்கள், கரும்பு விவசாயிகள், மாணவ, மாணவியர் உள்ளிட்ட அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தாங்கள் விளைவித்த கரும்புகளை உரிய நேரத்தில் வெட்டுவதற்கு உத்தரவு வழங்கப்படுவதில்லை என்றும், அதையும் மீறி உத்தரவு பெற்று கரும்புகளை சர்க்கரை ஆலைகளுக்கு வழங்கினால், அதற்கான தொகை உரிய நேரத்தில் பட்டுவாடா செய்யப்படுவதில்லை என்றும் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும், சிதம்பரம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் குடிநீர் முறையாக விநியோகிக்கப் படுவதில்லை. அப்படியே தண்ணீர் வந்தாலும் சாக்கடை நீர் கலந்து வருவதாகவும், சிதம்பரம் நகராட்சி குப்பை மேடாகக் காட்சி அளிப்பதோடு, கொசுத் தொல்லை அதிகமாக இருப்பதால் மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆட்படுவதாகவும், நகரம் முழுவதும் தெரு விளக்குகள் எரியாத நிலையில், சொத்து வரி, வணிக வரி, தொழில் வரி உள்ளிட்ட வரிகளை உயர்த்தி தங்களை மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கி இருப்பதாகவும் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து புகார் தெரிவிக்கின்றனர்.

எனவே, மக்கள் நலனில் அக்கறை செலுத்தாமல், மக்கள் விரோதப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தி.மு.க. அரசைக் கண்டித்தும், மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், அ. த ி. ம ு.க. கடலூர் மேற்கு மாவட் ட ஜெயலலிதா பேரவையின் சார்பில் வரு‌ம் 17ஆ‌ம் தே‌தி காலை 10 மணியளவில் சிதம்பரம் பெரியார் சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments