Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை த‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை : நடிக‌ர் ‌விஜ‌ய் 16இ‌ல் உ‌ண்ணா‌விரத‌ம்!

Webdunia
வெள்ளி, 14 நவம்பர் 2008 (10:18 IST)
இலங்கை தமிழர ்க‌ள் படுகொலையை க‌‌ண்டி‌த்து சென்னையில் வரு‌ம் 16ஆ‌ம ் தேதி, ‌பிரபல த‌மி‌ழ் ‌திரையுலக நடிகர் விஜய் தனது ரசிகர்களுடன் உண்ணாவிரத போரா‌ட்ட‌ம் நட‌த்து‌கிறா‌ர ்.

இதுதொடர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "நடிகர் சங்கம் சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தின்போது நான் கேட்டுக்கொண்டபடி, இந்திய பிரதமருக்கு பல்லாயிரக்கணக்கான தந்திகளை கொடுத்து எனக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

தற்போது இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலையாவதும், பல ஆயிரக்கணக்கானவர்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள வீடுகளை விட்டுவிட்டு குழந்தை குட்டிகளோடு காட்டுக்குள் பதுங்கு குழிகளில் தஞ்சம் புகுந்து தவிப்பதையும் கேள்விப்பட்டு இருக்கிறோம்.

இலங்கை தமிழ் சகோத ர, சகோதரிகளின் படுகொலையை கண்டித்து, தமிழ் உணர்வை காட்ட வேண்டிய கட்டாயமும், நேரமும் வந்திருக்கிறது என்பதை உணர்ந்து, நம் நற்பணி இயக்கத்தின் சார்பில் ஒரு உண்ணாவிரத போராட்டம் நடத்த வேண்டும் என்று அனைவரும ் வேண்டுகோள் விடுத்து இருந்தீர்கள்.

வரும் 16 ஆ‌ம ் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நற்பணி இயக்கத்தினரோடு சென்னையில் ஒருநாள் உண்ணாவிரதம் இருந்து ஈழ தமிழர்கள் மீது நமக்கு இருக்கும் பரிவையும், பாசத்தையும் வெளிக்காட்ட நான் முடிவு செய்திருக்கிறேன். காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை உண்ணாவிரதம் நடைபெறும்.

சென்னையில் நடக்கிற அதே 16 ஆ‌ம ் தேதி தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களிலும், அத்தனை நகரங்களிலும் நீங்களும் உண்ணாவிரதம் இருந்து உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன்.

அத்தனை சகோதரர்களும், சகோதரிகளும் துயரத்தின் அடையாளமாக கறுப்பு துணியுடன் மவுனமாகவும், அமைதியாகவும், அறவழியிலும், அஹிம்சா வழியிலும் உணர்வுகளை பதிவு செய்ய வேண்டும். இதை அந்தந்த மாவட்ட தலைவர்களும், நகர, ஒன்றிய தலைவர்களும் பொறுப்பேற்று நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிற ே‌‌‌ன்" எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments