Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌மி‌ன்வெ‌ட்டு : ஈரோட்டில் நாளை ஆர்ப்பாட்டம் - ஜெயலலிதா அறிவிப்பு!

Webdunia
புதன், 12 நவம்பர் 2008 (12:25 IST)
மி‌ன்வ‌ெ‌ட்டை‌க் க‌ண்டி‌த்து ஈரோ‌ட்டி‌ல் நாளை அ.இ. அ.தி.மு.க. சா‌ர்‌பி‌ல் க‌‌ண்டன ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நடைபெறு‌ம் எ‌ன்று ‌அ‌க்க‌ட்‌சி‌‌யி‌ன் பொதுச் செயலர் ஜெயலலித ா அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்து அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில ், " அதிகரிக்கும் மின் தேவையைக ் கருத்தில் கொண்டு மின் உற்பத்தித்திறனை உயர்த்த வேண்டிய தமிழ்நாடு மின்சார வாரியம், மின் உற்பத்தித் திறனை படிப்படியாக குறைத்துக் கொண்டு, மின்வெட்டை உயர்த்திக் கொண்டே வருகிறது.

இதன் விளைவாக, ஈரோடு மாவட்டத்தில் விசைத்தறித் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாக விசைத்தறித் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் தொடர் மின்வெட்டு காரணமாக பெருந்துறை சிப்காட் வளாகத்தில் உள்ள ஜவுளி பதனிடும் தொழிற்சாலைகள், பிளாஸ்டிக் தொழிற்சாலை, நார் தொழிற்சாலை, இரும்பு தொழிற்சாலை, கெமிக்கல் தொழிற்சாலைகள் மற்றும் குளிரூட்டப்பட்ட காய்கறி இருப்புக் கிடங்கு உள்ளிட்ட பல தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதோடு மட்டுமல்லாமல், மேற்படி தொழிற்சாலைகளில் பணிபுரியும் 15,000‌ க ்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழப்புக்கும், ஊதிய இழப்புக்கும் ஆளாக்கப்பட்டு உள்ளனர்.

கடும் மின்பற்றாக்குறை காரணமாக போதுமான தண்ணீர் வசதி இல்லாததால், பல தொழிற்சாலைகள் மூடப்படும் அபாய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இது தவிர, விவசாய உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டு, விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் பரிதாப கரமான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பள்ளி மற்றும் கல்லூரி மாண வ, மாணவியர் உட்பட அனைத்து தரப்பினரும் மின்வெட்டின் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத ை‌க ் கண்டித்து அ.தி.மு.க. ஈரோடு தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவையின் சார்பில் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மண ி யளவில் ஈரோடு அரசு பொது மருத்துவமனை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும ்" எ‌ன்று கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments