Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோரிக்கை நிறைவேறும்வரை கரும்பு கொடுப்பதில்லை!

வேலுச்சாமி, ஈரோடு

Webdunia
புதன், 12 நவம்பர் 2008 (12:22 IST)
தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும்வரை கரும்பு ஆலைகளுக்கு கரும்புகளைக் கொடுப்பதில்லை என்று ஈரோடு மாவட்ட கரும்பு விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

கரும்புக்கு டன்னுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், கரும்புக்கான நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பவானியை அடுத்த ஆப்பக்கூடல் சக்தி சர்க்கரை ஆலை முன் விவசாயிகள் சமீபத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த மறியல் போராட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார்.

தமிழக விவசாயிகள் சங்கம், இடதுகரை பாசன விவசாயிகள் சங்கம், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட சங்கங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் இந்த சாலைமறியலில் பங்கேற்றனர்.

மறியலில் ஈடுபட்ட விவசாயிகளுடன் அதிகாரிகள் பேச்சுவாரத்தை நடத்தினர். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படாததால், கோரிக்கைகள் நிறைவேறும்வரை சர்க்கரை ஆலைக்கு கரும்பு கொடுப்பதில்லை என விவசாயிகள் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments