Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌நியாய ‌விலை கடைக‌ளி‌ல் ம‌ளிகை‌ப் பொரு‌ட்க‌ள் வழ‌ங்க ரூ.100 கோடி அனும‌தி!

Webdunia
செவ்வாய், 11 நவம்பர் 2008 (14:46 IST)
நியா ய ‌ வில ை கடைகளில் வழ‌ங்க‌ப்ப‌ட்ட ு வரு‌ம ் மளிகைப் பொருட்களை குறைந்த விலையில் வழங்க நட‌ப்பா‌ண்டி‌ற்கா ன முத‌ல ் துண ை ம‌தி‌ப்‌பிட‌்டி‌ல் ரூ.100 கோடி அனும‌தி‌க்‌க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

த‌மிழ க சட் ட‌ ப்பேரவை‌யி‌ல் இன்று 2008-2009ஆ‌ம் ஆண்டுக்கான முதல் துணை ம‌தி‌ப்‌பீ‌ட்டை அமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்தார். அதில் ரூ.3,055 கோடியே 37 லட்சம் நிதி ஒதுக்க வகை செய்யப்பட்டிருந்தது.

பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டிற்கான அரசின் பங்காக ரூ. 110.52 கோடியு‌ம், ‌நியா ய ‌ வில ை கடைகளில் மளிகைப் பொருட்களை குறைந்த விலையில் வழங்க ரூ.100 கோடியும், சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு மானியம் வழங்க ரூ.80 கோடியும் அனுமதித்துள்ளது.

மின் வாரியத்திற்கு கூடுதல் பங்கு மூலதன உதவி வழங்க ரூ.570.50 கோடி தேவைப்படுவதா‌ல் துணை மதிப்பீடுகளில் சேர்க்கப்பட்டுள்ளது. நலிந்த பிரிவினரின் வீட்டு வசதி கடன்களை அரசு தள்ளுபடி செய்ததையொட்டி தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையத்திற்கு இழப்பீடு வழங்க ரூ.593.68 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.

கழிவுநீர் அகற்றல் வாரியத்திற்கு மானியமாக ரூ.3 கோடி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. ச‌ட்ட‌ப்பேரவ ை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்த அரசு ரூ.70.50 கோடியு‌ம் அனுமதித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments