Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை‌யி‌ல் போரை ‌நிறு‌த்த ம‌த்‌திய அரசு வ‌லியுறு‌த்த வே‌ண்டு‌ம் : கருணா‌நி‌தி!

Webdunia
திங்கள், 10 நவம்பர் 2008 (15:39 IST)
இல‌ங்கை‌யி‌ல ் போ‌ர ் ‌ நிறு‌த்த‌ம ் கொண்டு வர வேண்டியது இலங்கை அரசுக்குரிய தவிர்க்க முடியாத பொறுப்பும், கடமையுமாகும் எ‌ன்று‌ம் இதனை இந்திய அரசு இலங்கை அரசுக்கு உணர்த்தி செயல்படச் செய்வது அவசர அவசியத் தேவையாகும ் எ‌ன்ற ு‌ ம ் முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது கு‌றி‌த்து அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையி‌ல், "இலங்கையில் போர் நிறுத்தம் என்பது இரு சாராரும் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று என நான் குறிப்பிட்டிருந்தேன். விடுதலைப்புலிகளின் சார்பாக நடேசன் தாங்கள் போர் நிறுத்தத்திற்குத் தயார் என்று தற்போது அறிவித்திருக்கிறார்.

இதற்கிடையே "இந்திய அரசு நினைத்தால் ஒரே நாளில் இலங்கையில் நடக்கும் சண்டையை நிறுத்தி விட முடியும்'' என்று டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார். டாக்டர் அதை மட்டும் சொல்லவில்லை. "இலங்கை அரசும் விடுதலைப்புலிகளும் உட்கார்ந்து பேசி அரசியல் தீர்வு காண்பதற்கு இந்திய அரசு முயற்சிக்க வேண்டும்'' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நமது பிரதமர் மன்மோகன ் சிங் 14-10-2008 அன்று செய்தியாளர்களிடம் வெளியிட்ட கருத்து, "இலங்கைப்பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காண முடியாது. சமரசப் பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண வேண்டும்'' என்பதாகும்.

22-10-2008 அன்று நாடாளுமன்றத்தில் நமது வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி வைத்த அறிக்கையிலும் "இனப்பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை தீர்வாகாது என்ற நமது ஆழ்ந்த நம்பிக்கையை நான் இங்கு மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். இலங்கையில் அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண வேண்டும். அது ஒன்றுபட்ட இலங்கையின் சட்ட திட்டத்தின்படி தமிழ்ச் சமுதாயம் உள்ளடக்கிய சிறுபான்மையினரின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

இப்படியொரு பேச்சுவார்த்தை நடைபெறவும், அரசியல் தீர்வு காணவும் இலங்கையில் போர் புரிந்து கொண்டிருக்கின்ற இலங்கை ராணுவம் - விடுதலைப்புலிகள் இரு சாராருமே இணக்கம் தெரிவித்து - போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும். அதை வலியுறுத்தித்தான் அக்டோபர் 14ஆ‌ம ் தேதியன்று தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்தத் தீர்மானம் படிப்படியாக நடைமுறைக்கு வரக்கூடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக நமது பிரதமரின் கருத்தும், வெளியுறவுத்துறை அமைச்சரின் கருத்தும் அமைந்துள்ளன.

இனி அந்தக் கருத்தைச் செயலாக்கத்திற்கு கொண்டு வர வேண்டியது இலங்கை அரசுக்குரிய தவிர்க்க முடியாத பொறுப்பும் கடமையுமாகும். இதனை இந்திய அரசு இலங்கை அரசுக்கு உணர்த்தி செயல்படச் செய்வது அவசர அவசியத் தேவையாகும்" எ‌ன்று முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments