Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துப்பாக்கிசூடு: இலங்கை அரசு மறுப்பு!

Webdunia
ஞாயிறு, 9 நவம்பர் 2008 (02:03 IST)
கோடியக்கரை சம்பவத்தில் தமிழக மீனவரை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தவில்லை என்று சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் அதிகாரி மறுத்துள்ளார்.

இதுதொடர்பாக இலங்கை துணை தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று கருதி கடந்த 7ஆம் தேதி காங்கேசன்துறை பகுதியில பாதுகாப்புக்காக இலங்கை கடற்படையினர் ரோந்துப் பணியில் மட்டுமே ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடியக்கரை-காங்கேசன்துறை இடையே உள்ள பொதுப் பகுதியில் இந்திய மீன்பிடி படகுகள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு ஏதும் நடத்தவில்லை என்றும், இந்தியாவுக்கும் - இலங்கைக்கும் இடையேயான நட்புறவை சேதப்படுத்துவதற்கு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை விடுதலைப்புலிகள் இன்னும் கைவிடவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்கள் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்துவதை சமீபத்தில் நடந்த சம்பவங்கள் தெளிவாக்குவதாகவும், எனவே தவறான தகவல்களை பரப்ப விடுதலைப்புலிகள் எடுத்துக் கொள்ளும் முயற்சியை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அந்த செய்திக்குறிப்புல் கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments