Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிரந்தர‌ப் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் : கருணாநிதி கரு‌த்து!

Webdunia
வெள்ளி, 7 நவம்பர் 2008 (15:54 IST)
இல‌ங்கை அரசு‌ம், ‌விடுதலை‌ப்பு‌லிகளு‌ம் இ‌ன்று ஈடுபட்டுள்ள சண்டை ஒத்தி வைக்கப்பட்ட ு, நடுநிலை நாடுகளுடன் இந்தியாவும் ஒப்புக் கொள்ளக்கூடியதான சமரசப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட ு, அதன் இறுதிக்கட்டமாக நிரந்தரப் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பது என் கருத்த ு எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள கேள்வி - பதில் அ‌றி‌க்க ை:

தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என் ன?

அண்ணா முதல்வராக இருந்த போது "சென்னை ராஜ்யம்'' என்ற பெயரை விடுத்து "தமிழ்நாடு'' என்று பெயர் சூட்டியது ஒரு பெருஞ்சாதனை! அண்ணா காலத்தில் தான் சுயமரியாதைத் திருமணங்கள், சட்டப்படி செல்லுபடியாக்கப்பட்டன.

அண்ணா காலத்தில் தான் ‌ தி.மு.க. ஆட்சியில் "இந்தி மொழி ஆதிக்கம்'' அகற்றப்படவும ்- தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழித் திட்டம் அறிவிக்கப்படவுமானநிலை. அண்ணா மறைவுக்குப் பின் நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்று ஆட்சி நடத்திடும் இந்தப் பதினாறு ஆண்டு காலத்தில ், மனிதனை வைத்து மனிதன் இழுத்த கை ர ி‌க் ஷ ாக்களை ஒழித்து விட்டு; அவற்றுக்கு மாற்றாக அந்தத் தொழிலாளிகளுக்கு இலவச சைக்கிள் ர ி‌க் ஷா வழங்கப்பட்ட திட்டம்.

பட்டிதொட்டி முதல் பட்டினக்கரை வரையில் பார்வை இழந்தோர்க்கு இலவசக் கண்ணொளி வழங்கும் திட்டம். பிச்சைக்காரர் மறு வாழ்வுத் திட்டம்; விவசாயிகளுக்கு - நெசவாளர்களுக்கு - இலவச மின்சாரத் திட்டம்; பெண்களுக்கு சொத்துரிமை சட்டம் - வேலையில் 30 சதவிகித ஒதுக்கீடு. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகச் சட்டம்.

குடிசை மாற்று வாரியம்; குடிநீர் வாரியம்; ஆதி திராவிடர்க்கு இந்தியாவிலேயே முன்மாதிரியான இலவச வீடுகள் வழங்கும் திட்டம்; மலம் சுமக்கும் துப்புரவு தொழிலாளர் மறுவாழ்வுக்கு மாற்றுத் திட்டம்; ப ேருந்துகள் நாட்டுடைமையாக்கப்பட்டு - அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் அமைப்பு; பேருந்துகள் கிராமங்களுக்கெல்லாம் செல்ல வழிவகை காணப்பட்டது.

உடல் ஊனமுற்றோருக்கு உதவி வழங்க பல்வேறு திட்டங்கள்; விவசாயிகளுக்கு 7,000 கோடி ரூபாய் கடன் ரத்து திட்டம் - வட்டி 9 சத விகிதத்திலிருந்து 4 சதவிகிதமாகக் குறைப்பு. கிலோ அரிசி இரண்டு ரூபாய் என்றாக்கி, தற்போது ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் திட்டம். விலைவாசியைக் கட்டுப்படுத்திட குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்கள்; காமராஜ் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாள் என்று சட்டம் - மாணவர்களின் கல்விக் கட்டணங்கள் அனைத்தும் ரத்து.

சத்துணவில் வாரம் மூன்று முட்டைகள் - வாழைப்பழம் வழங்கும் திட்டம். புதிய புதிய பல்கலைக்கழகங்கள் - பொறியியல் கல்லூரிகள் - மருத்துவக் கல்லூரிகள் - கலை அறிவியல் கல்லூரிகள். பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பேருந்து பாஸ். ஏழை மகளிருக்கு முதுகலைப் பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி. தொலைக்காட்சி பெட்ட ி. சத்துணவு ஊழியர்களுக்கும் காலமுறை ஊதியம்; பள்ளிகளில் தமிழ் கட்டாயப்பாடம் எனச்சட்டம்.

பரிதிமால் கலைஞரின் கனவு நனவாகி தமிழ் செம்மொழி என அறிவிப்பு; தைத்திங்கள் முதல் நாள் - தமிழ்ப்புத்தாண்டு எனச்சட்டம். மே தினத்திற்கு ஊதியத்தோடு கூடிய விடுமுறை; ஏழைப் பெண்களின் திருமண உதவிக்கு 20 ஆயிரம் ரூபாய்; கர்ப்பிணிப் பெண்களுக்கு 6,000 ரூபாய் நிதி உதவி. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 25 நலவாரியங்கள். 50 வயதாகியும் திருமணம் ஆகாத ஏழை மகளிருக்கு மாதம் 400 ரூபாய் வழங்கும் திட்டம்.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் - சுழல் நிதி உதவிகள ். அதைப் போலவே இளைஞர்களுக்கும், விவசாயிகளுக்கும் சுயஉதவிக் குழுக்கள்; தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லா வீடுகளுக்கு இலவச வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகள்; எரிவாயு இணைப்புடன் கூடிய இலவச எரிவாயு அடுப்புகள்; பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம். அண்ணா மறுமலர்ச்சித் திட்டம். நமக்கு நாமே திட்டம்.

ரா மந ாதபுரம், ஒக்னேக்கல் கூட்டுக்குடிநீர் திட்டங்கள். திருச்சியில் உய்யகொண்டான் - சேலத்தில் திருமணிமுத்தாறு சீரமைப்புத் திட்டங்கள ். மாநிலத்திற்குள் நதிகளை இணைக்கும் மாபெரும் திட்டம்; நகராட்சிகள் அனைத்திலும் பாதாளச் சாக்கடைத் திட்டம். சென்னை மாநகருக்கு மெட்ரோ ரயில் திட்டம். சென்னை மாநகரில் விளம்பரப் பலகைகளை அகற்றி சிங்காரச் சென்னையாக்கிய திட்டம்.

கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம். கட்டணத்தை உயர்த்தாமல் பத்தாயிரம் புதிய பேருந்துகள். புதிய சட்டமன்ற வளாகம் - தலைமைச் செயலகம். உலகத்தரத்தில் அரசு நவீன நூலகம ். உழவர் சந்தைத் திட்டம். வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு உதவி நிதித் திட்டம். வேலை நியமனத் தடைச் சட்டம் நீக்கப்பட்டு அரசு துறைகளில் புதிதாக 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு. 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட புதிய காவலர்கள் நியமனம்.

இந்தியாவிலேயே முன்னோடியாக மூன்று காவல் ஆணையங்கள ். வருமுன் காப்போம் திட்டம். ஏழைச் சிறார் இதய நோய் தீர்க்கும் திட்டம். நிலமற்ற ஏழைகளுக்கு இலவச நிலம். புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி வாழ்வோருக்கு வீட்டுமனைப் பட்டா. இஸ்லாமியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு. கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம் ரத்து. மி கவு‌ம் பிற்பட ு‌த்த‌ப்ப‌ட் டவர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு.

பழங்குடியினருக்கு புதிதாக ஒரு சதவிகித இட ஒதுக்கீடு. அரசு அலுவலர்களுக்கு மத்திய அரசு அலுவலர்களுக்கு இணையான ஊதியம். அரசு அலுவலர் இறந்தால் குடும்பப் பாதுகாப்பு நிதி. விடுதலை வீரர்களுக்கும், தியாகிகளுக்கும் நினைவகங்கள் - குடும்பங்களுக்கு நிதி உதவிகள். ச ென்னையில் வள்ளுவர் கோட்டமும், குமரி முனையில் 133 அடி உயரத்தில் வள்ளுவருக்கு சிலையும்.

மத்திய அமைச்சர் ராஜா மீது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து விசாரணை நடத்த வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம ்ய ூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்திருக்கிறதே?

மத்திய அமைச்சர் ராஜா தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து படித்து உழைத்து பாடுபட்டு படிப்படியாக முன்னேறி இன்று மத்திய அமைச்சரவையில் பணியாற்றி வருகிறார். அவர் அந்தப் பொறுப்பில் இருப்பது ஒரு சிலருக்குத்தான் பிடிக்கவில்லை என்றால் மார்க் சிஸ்ட் கம ்ய ூனிஸ்ட் கட்சியே விசாரணை கோரியுள்ளது. அந்தத் துறையிலே எடுக்கப்பட்ட அத்தனை நடவடிக்கைகளும் பிரதமரின் ஒப்பு தலோடு தான் எடுக்கப்பட்டதாக அமைச்சர் ராஜா ஏற்கனவே விளக்கமாகக் கூறியிருக்கிறார்.

விசாரணை கேட்டுள்ள மார்க்சிஸ்ட் கம ்ய ூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரும ், பி.எஸ்.என்.எல். தொழிற்சங்கத்தின் தலைவரும ், ஐக்கிய கூட்டமைப்பின் அமைப்பாளருமான நம்பூதிரி என்பவர் இந்த ஸ்பெக்ட்ரம் கொள்கை குறித்து எழுதியுள்ள கடிதத்தில் (பி.எஸ்.என்.எல். சங்கங்களைச் சார்ந்த சில அமைப்பாளர்களின் சார்பில் அரசு பின்பற்றி வரும் 2-ஜி ஸ்பெக்ட்ரம் கொள்கை தொடர்பாக சில அய்யப்பாடுகளை எழுப்பி, அவை தமிழ் நாளேடுகளில் வெளி வந்திருப்பது எங்கள் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

அரசு பின்பற்றி வரும் தற்போதைய கொள்கைகளிலிருந்து எந்தவித மாற்றத்தையும் நாங்கள் இதிலே காண முடியவில்லை. அரசு எடுத்த முடிவை நாங்கள் முழ ு வதுமாக ஆதரிக்கிறோம். உண்மையில் தகவல் தொடர்பு அமைச்சருக்கு; பி.எஸ்.என்.எல். அமைப்பின் எதிர்கால நலன் கருதியும், அதில் பணியாற்றும் அலுவலர்களின் நலன் கருதியும் 3 - ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலமின்றி முன்கூட்டியே ஒதுக்கீடு செய்த தீரமிக்க முடிவிற்காக - எங்களுடைய பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பற்றி ஜெயலலிதா இன்று விடுத்துள்ள அறிக்கையிலே அவர் ஏற்கனவே தன்னைத் தானே பாராட்டிக் கொண்டார் என்றும், தற்போது பிதற்றலான புள்ளி விவரங்களைக் கூறி வருவதாகவும், பெரிய பொருளாதார மேதை என்று சொல்லக் கூடிய பாரதப் பிரதமரும் - ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்த நிதி அமை‌ச்ச‌ர் ப.சிதம்பரமும் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறாரே?

ஜெயலலிதா இந்திய நாட்டின் முக்கிய தலைவர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்வது என்பது இது முதல்முறையல்ல.

பா.ம.க. தலைவர் கோ.க.மணி கடந்த வாரம் விடுத்த அறிக்கையில் விடுதலைப்புலிகளை தாங்கள் ஆதரிக்கவில்லை, தங்களுக்கும் அவர்களுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை, அவர்களைப் பார்த்ததே கூட இல்லை என்பதைப் போல கூறி அனைத்து ஏடுகளிலும் வெளிவந்தது. ஆனால் நேற்றைய தினம் பா.ம.க. நிறுவனத் தலைவர் சேலத்தில் கூறும்போது தமிழ் ஈழம் விடுதலைப்புலிகளால் மட்டுமே முடியும் என்றும், அவர்களை தீவிரவாதிகள் என்ற கோணத்தில் பார்ப்பது சரியல்ல என்றும் சொல்லியிருக்கிறாரே?

விடுதலைப்புலிகள் பற்றி தமிழ்நாட்டிலே உள்ள கட்சிகளிடையே ஒவ்வொரு கட்டத்திலும் முரண்பாடான கருத்துக்கள் உண்டு. தி.மு. க.வை‌ப் பொறுத்தவரை விடுதலைப்புலிகள் பற்றி ராஜீவ்காந்தி மறைவுக்கு முன் - மறைவுக்குப்பின் என்று இருவேறு விதமான கருத்துக்கள் உண்டு என்பதை நான் இன்றல்ல - ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு பேரவையிலேயே தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறேன். போர் நிறுத்தம் என்பதிலேகூட - போர் நிறுத்தம் என்பது போரிலே ஈடுபட்டுள்ள இரண்டு தரப்பினரும் ஒப்புக் கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டிய ஒன்றாகும்.

தமிழ்நாட்டிலே உள்ள அனைவரும் போர் நிறுத்தம் செய்யக் கோரி அதைச் செய்யச் சொல்லி இந்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். இருதரப்பினரின் நிலை தெரியாமல், ஒரு தரப்பை மட்டும் போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென்று கேட்பது எந்த அளவிற்கு சாத்தியம் என்று தெரிய வில்லை.

அதனால் தான் இலங்கைப் பிரச்சனை பற்றி பேசும்போதோ, நிலை எடுக்கும்போதோ முரண்பட்ட கருத்துக்கள் எதிரொலிக்கின்றன. எனவே இருதரப்பினரும் இன்று ஈடுபட்டுள்ள சண்டை ஒத்தி வைக்கப்பட்ட ு, நடுநிலை நாடுகளுடன் இந்தியாவும் ஒப்புக் கொள்ளக்கூடியதான சமரசப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட ு, அதன் இறுதிக்கட்டமாக நிரந்தரப் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பது என் கருத்த ு.

இ‌வ்வாறு முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி தனது அ‌றி‌‌க்கை‌யி‌ல் கூ‌றியு‌ள்ளா‌ர்.

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?