Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ‌ங்‌கில‌த்‌தி‌ல் பேரு‌ந்து டி‌க்கெ‌ட்: ஜெயல‌‌லிதாவு‌க்கு அமை‌ச்ச‌ர் நேரு ப‌தி‌ல்!

Webdunia
வெள்ளி, 7 நவம்பர் 2008 (14:27 IST)
மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் பயணச்சீட்டுகளை புதிய மின்பொருள் உதவியுடன் தமிழில் வழங்கிட ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா கவு‌ம், ஜெயல‌லிதா ஆ‌ட்‌சி‌க் கால‌த்‌தி‌ல் ‌வீ‌ழ்‌ந்து போன போ‌க்குவர‌த்து‌க்கழக‌ம் த‌ற்போது ந‌ன்ம‌தி‌ப்பை பெ‌ற்று‌ள்ளதாகவு‌ம் போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூ‌றியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
செ‌ன்ன ை மாநக ர பேரு‌ந்துக‌ளி‌ல ் பயணச்சீட்டுகள் ஆங்கிலத்தில் வழங்கப்படுவதை கண்டித்து அ.இ.அ. த ி. ம ு. க பொதுச் செயலர் ஜெயலலிதா அறிக்கை வெ‌ளி‌யி‌ட்ட ு இரு‌ந்தா‌ர ். இத‌ற்க ு போ‌க்குவர‌த்து‌த்துற ை அமை‌ச்ச‌ர ் க ே. எ‌ன ். நேர ு ‌ விள‌க்க‌ம ் அ‌ளி‌த்து‌ள்ளா‌ர ்.

இத ு தொட‌ர்பா க அவ‌ர ் இ‌ன்ற ு வெளியிட்டுள்ள அறிக்கையில ், மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் பயணிகளுக்கு விரைந்து பயணச்சீட்டு வழங்குவதற்கும், நடத்துனர்களுக்கு பயணச்சீட்டு வழங்குவதனை எளிதாக்குவதற்கும் போக்குவரத்துக் கழகத்தில் இயக்கப்படும் 2,900 பேருந்துகளில் சுமார் 800 பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு கருவிகள் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தபோது பயணச் சீட்டுகளைத் தமிழில் அச்சடித்துத் தரக்கூடிய மென்பொருள் உருவாக்கப்படவில்லை என்பதனால் ஆங்கிலத்திலேயே அச்சடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

எனினும், தமிழக முதல்வர் கருணாநிதி பயணிகளுக்குப் பயணச்சீட்டினைத் தமிழிலேயே வழங்க வேண்டும் என அறிவுறுத்தி, அதற்கான நடவடிக்கையினைத் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என ஆணையிட்டார். அதனைச் செயல்படுத்துவதற்குரிய நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்பட்டு, தமிழிலேயே பயணச்சீட்டினை அச்சடித்து வழங்க 800 மின்னணு பயணச் சீட்டுக் கருவிகள் தற்சமயம் வழங்கப்பட்டுள்ளன.

தமிழில் அச்சடித்துத் தரக்கூடிய மென்பொருளும் பெறப்பட்டு, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் படிப்படியாக பயணச்சீட்டுக் கருவிகள் மூலம் அனைத்துப் பயணிகளுக்கும் தமிழில் பயணச் சீட்டுகளை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதனை அறிந்திருந்தும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஏதாவது ஒரு போராட்டத்தை அறிவிப்பதனை வழக்கமாகக் கொண்டுள்ள முன்னாள் முதலமைச்சர் இப்போராட்டத்தினையும் அறிவித்துள்ளார்.

அவருடைய ஆட்சி காலத்தில் வீழ்ந்து போன போக்குவரத்துக் கழகங்களைத் தலைநிமிர வைத்ததுடன் ஏராளமான புதிய பேருந்துகளை இயக்கி மக்களின் நன்மதிப்பினை இவ்வரசு பெற்றுள்ளதைக் கண்டு மனம் பொறுக்க முடியாமல் மக்கள் மத்தியில் தவறான தகவல்களைத் தந்து குழப்பம் உண்டாக்குவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள் எ‌ன்ற ு அமை‌ச்ச‌ர ் நேர ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments