Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியல் தலைவர்கள் உத்தப்புரம் செல்ல‌த் தடை!

Webdunia
வெள்ளி, 7 நவம்பர் 2008 (11:17 IST)
உத்தப்புரத்தில் ஏற்பட்ட பிரச்சனைக்கு பின்னர் தற்போது அங்கு சகஜ நிலை திரும்பி உள்ளது எ‌ன்று‌ம ் தற்போதைய சூழ்நிலையில் உத்தப்புரத்திற்கு அரசியல் கட்ச ி‌த் தலைவர்கள் செல்ல அனுமதி இல்லை எ‌ன்று‌ம் கூடுதல் காவ‌ல்துறை தலைமை இய‌க்குன‌ர் ராஜேந்திரன் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

மதுரை மாவட்டம் உத்தப்புரம் பகுதியில் ஏற்பட்ட வன்முற ை, துப்பாக்கி சூடு ‌ நிக‌ழ்வுகளை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் மதுரையில் கூடுதல் காவ‌ல்துறை தலைமை இய‌க்குன‌ர் ராஜேந்திரன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், உத்தப்புரத்தில் ஏற்பட்ட பிரச்சனைக்கு பின்னர் தற்போது அங்கு சகஜ நிலை திரும்பி உள்ளது எ‌ன்று‌ம் தற்போதைய சூழ்நிலையில் உத்தப்புரத்திற்கு அரசியல் கட்ச ி‌த் தலைவர்கள் செல்ல அனுமதி இல்லை எ‌ன்றா‌ர்.

உத்தப்புரம் பகுதியில் தற்போதுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்னும் ஓரிரு வாரங்கள் தொடரும் எ‌ன்று கூ‌றிய ராஜே‌ந்‌திர‌ன், உத்தப்புரம் பகுதியில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது எ‌ன்றா‌ர்.

புதிதாக தலைவர்கள் சிலைகள் வைக்க அனுமதி கிடையாது என‌்று தெ‌ரி‌வி‌த்த ராஜே‌ந்‌திர‌ன், அரசிடம் முன் அனுமதி பெற்ற பிறகே சிலைகள் வைக்க வேண்டும் எ‌ன்றா‌ர்.

அரசியல் தலைவர்கள் தென்மாவட்டங்களுக்கு வரும்போது சூழ்நிலைக்கேற்ப பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது எ‌ன்று‌ம் தேவைப்பட்டால் உளவுத்துறை மூலம் கருத்தறிந்து கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் எ‌ன்று‌ம் கூடுதல் காவ‌ல்துறை தலைமை இய‌க்குன‌ர் ராஜேந்திரன் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments