Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌மி‌ன்ப‌ற்றா‌க்குறை: வெ‌ள்ளை அ‌றி‌க்கை- சரத்குமார் வ‌லியுறு‌த்த‌ல்!

Webdunia
வெள்ளி, 7 நவம்பர் 2008 (09:54 IST)
ஒவ்வொரு துறைக்கும் ‌ மி‌ன் பற்றாக்குறை எவ்வளவு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும், உண்மையான நிலவரங்களையும் அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில ், தமிழகத்தின் மின்வெட்டு ஒரு நிமிடம் கூட காலதாமதமின்றி மிகச் சரியான நேரத்திற்கு தினசரி அமல்படுத்தப்படுகிறது. மின்வெட்டால் தொழிற்சாலைகள் முழுமையாக இயங்க முடியாத சூழ்நிலை தொடர்கிறது. குறிப்பாக கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான பஞ்சாலைகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி அதனால் சுமார் 45 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பும், சுமார் 70 ஆயிரம் தொழிலாளர்களுக்கு சம்பள இழப்பும் ஏற்பட்டு இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

விவசாயமும், தொழிலும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அரசு வழங்கிவரும் இலவச கலர் டி.வி.யால் 250 மெகாவாட் கூடுதல் மின்சாரம் தேவைப்படுகிறது என்கிற தகவலை மின்சார வாரிய ஊழியர் அமைப்பினரே தெரிவித்துள்ளனர். தற்போது மேலும் 40 லட்சம் கலர் டி.வி. வழங்குவதற்கான டெண்டர் திறக்கப்பட்டுள்ளது. இந்த கலர் டி.வி.க்களை பயன்படுத்த மின்சாரம் எங்கிருந்து கிடைக்கப்போகிறது?

தங்களது மின் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள தொழிற்சாலைகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஜெனரேட்டர்களை பயன்படுத்தி கொள்ளலாம் என்றால், அதற்கான டீசலை அதிகவிலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.

தற்சமயம் தொழிற்சாலைகளுக்கான மின்தேவை எவ்வளவு, விவசாயத்திற்கான மின்தேவை மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தின் அளவு எவ்வளவு, வீடுகளுக்கான மின்தேவை எவ்வளவு, இவற்றில் ஒவ்வொரு துறைக்கும் பற்றாக்குறை எவ்வளவு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும், உண்மையான நிலவரங்களையும் அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.

இந்த உண்மைகளின் அடிப்படையில், இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வுகாண அனைத்த ு‌க் கட்சிகளையும் முதலமைச்சர் கருணாநிதி அழைத்து ஆலோசித்ததுபோல, தமிழக மின் பற்றாக்குறைக்கு தீர்வுகாண அனைத்த ு‌க் கட்சியினரையும் மின்துறை சார்ந்த நிபுணர்களையும் அழைத்து ஆலோசனை பெற வேண்டும்.

பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்வதில் ஆளுங்கட்சி, எதிர ்‌க ்கட்சி என்ற பேதங்கள் பார்க்க வேண்டிய நேரம் இதுவல்ல. நல்ல ஆலோசனைகளை யார் வழங்கினாலும், மக்கள் நலனை மனதில் கொண்டு, அவற்றை ஏற்று போர்க்கால நடவடிக்கை அடிப்படையில் முதலமைச்சர் கருணாநிதி தீர்வுகாண வேண்டும் எ‌ன்று சர‌த்குமா‌ர் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments