இலங்கையில் உள்ள தங்களது சகோதர, சகோதரிகள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து தமிழக மக்கள் உண்மையான கவலை கொண்டுள்ள நிலையில், வசூலித்த பணத்தை வைத்துக்கொண்டு கருணாநிதி என்ன செய்யப் போகிறார்? என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் அதி நவீன சாதனங்களை இலங்கை இராணுவத்திற்கு அனுப்பியது உண்மை தானே? என்று கேட்டுள்ளார்.
தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்துவதற்கான சாதனங்களைப் பொருத்துவதற்காக இந்திய விஞ்ஞானிகளும், தொழில்நுட்ப வல்லுநர்களும் மத்திய அரசால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட போது, தி.மு.க. மத்திய அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? என்று ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையில் உள்ள தங்களது சகோதர, சகோதரிகள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து தமிழக மக்கள் உண்மையான கவலை கொண்டுள்ள நிலையில், வசூலித்த பணத்தை வைத்துக்கொண்டு கருணாநிதி என்ன செய்யப் போகிறார்? என்று கேட்டுள்ள ஜெயலலிதா, இலங்கை அரசிடம் அளித்து, அந்தப் பணத்தை இலங்கைத் தமிழர்களை உயர்த்துவதற்கு பயன்படுத்தச் சொல்லி இலங்கை அரசை கேட்டுக் கொள்ளப் போகிறாரா? தமிழர்களுக்குத் தேவையானவற்றை வாங்குவதற்காக மேற்படி நிதியை பயன்படுத்த அதை இலங்கைக்கு அனுப்பப் போகிறாரா? என்று கேட்டுள்ளார்.