Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அரசை கண்டித்து ஒருவார‌ம் ம.தி.மு.க.‌வின‌ர் உண்ணாவிரதம்!

Webdunia
செவ்வாய், 4 நவம்பர் 2008 (09:43 IST)
இல‌ங்கை த‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை‌யி‌ல் ம‌த்‌திய அரசை‌க் க‌ண்டி‌த்து, ம.‌தி.மு.க. சா‌ர்‌பி‌ல் வரு‌ம் 12ஆ‌ம் தே‌தி முத‌ல் 18ஆ‌ம் தே‌தி வரை ஒருவார‌ம் போரா‌ட்டம் நட‌த்த‌ப்படு‌கிறது.

இது தொட‌ர்பாக ம.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில ், " ஈழத் தமிழர்களை படுகொலை செய்து வரும் சிங்கள அரசுக்கு ரேடார், ராணுவம் உள்பட அனைத்து உதவிகளையும் செய்து வரும் மத்திய அரசை கண்டித்து ம.தி.மு.க. சார்பில் வருகிற 12-11-2008 முதல் 18-11-2008 வரை கண்டன வாரம் கடைப்பிடிக்கப்படும்.

அதன்படி, 12 ஆ‌ம ் தேதி கோவை, கோவை மாநகர், நீலகிரி, நாமக்கல், சேலம், கரூர், திண்டுக்கல் ஆகிய இடங்களில் உண்ணாவிரதம் அல்லது பொதுக்கூட்டம் நடைபெறும். இதேபோல், 13 ஆ‌ம ் தேதி திருச்சி, திருச்சி மாநகர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, பெரம்பலூரிலும், 14 ஆ‌ம ் தேதி கடலூர், விழுப்புரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் கிழக்கு, வேலூர் மேற்கு, திருவண்ணாமலை, புதுச்சேரி ஆகிய இடங்களில் உண்ணாவிரதம் அல்லது பொதுக்கூட்டம் நடைபெறும்.

15 ஆ‌ம் தேதி மதுரை, மதுரை மாநகர், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய இடத்திலும், 16 ஆ‌ம ் தேதி திருநெல்வேலி, திருநெல்வேலி மாநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய இடங்களிலும், 17 ஆ‌ம ் தேதி காஞ்சீபுரம், திருவள்ளூரிலும், 18 ஆ‌ம ் தேதி வடசென்னை, தென்சென்னையிலும் உண்ணாவிரதம் அல்லது பொதுக்கூட்டம் நடைபெறும ்" எ‌ன்று கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments