Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மண‌ல் கொ‌ள்ளையை‌க் க‌ண்டி‌த்து‌ கா‌ஞ்‌சிபுர‌த்‌தி‌ல் நாளை ஆர்ப்பாட்டம் : ஜெயல‌லிதா!

Webdunia
திங்கள், 3 நவம்பர் 2008 (17:38 IST)
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மணல் கொள்ள ை, ‌மி‌ன்வெ‌ட்டை‌க ் கண்டித்து அ.இ.அ. த ி. ம ு.க. சார்பில் நாளை க‌ண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இதுகுறித்து அவர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில ், " கடந்த 29 மாத கால த ி. ம ு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சியில், மணல் கொள்ளை, அரிசிக் கடத்தல், சிமெண்ட் கடத்தல் என கடத்தல் தொழில்கள்தான் அமோகமாக நடைபெற்று வருகின்றன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பாலாறு மற்றும் குசஸ்தலை ஆறுகளில் சுமார் 20 அடிக்கும் மேலாக விதிமுறைகளையும் மீறி த ி. ம ு.க. வினரால் மணல் எடுக்கப்படுவதால், பெரும்பாக்கம், மேல்கதிர்பூர், கீழ்கதிர்பூர், விப்பேடு, நரப்பாக்கம், நல்லாட்டூர், என்.என்.கண்டிகை, சிவாடா, பூணி மாங்காடு மற்றும் அருங்குளம் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் பாலாற்றில் கொள்ளை அடிக்கப்படும் மணல், செவிலிமேடு, வந்தவாசி, ஓரிக்கை, மிலிடெரி, வாலாஜாபாத், தென்னேரி, சுங்குவார் சத்திரம் ஆகிய சாலைகள் வழியாக கனரக வாகனங்கள் மூலம் தினசரி எடுத்துச் செல்லப்படுகின்றன. அதேபோன்று, குசஸ்தலை ஆற்றில் கொள்ளை அடிக்கப்படும் மணல் வேலஞ்சேரி, தாழவேரி, பூணிமாங்காடு, அருங்குளம், நெமிலி ஆகிய சாலைகள் வழியாக கனரக வாகனங்கள் மூலம் நாள்தோறும் எடுத்துச் செல்லப்படுகின்றன. இதன் விளைவாக மேற்படி சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக காணப்படுவதால், விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட்டு மனித உயிரிழப்புகள் ஏற்படுவதாக செய்திகள் வருகின்றன.

மேலும் உத்திரமேரூர் தொகுதி, வாலாஜாபாத்தில் இருந்து சுங்குவார் சத்திரம் செல்லும் 18 க ி. ம ீ. சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கின்றன. இதையொட்டி உள்ள 15க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், வியாபாரிகள் மற்றும் மாண வ- மாணவியர் உள்ளிட்ட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தச் சாலையைத் தான் பயன்படுத்துகின்றனர்.

இந்தச் சாலையில் போதுமான பேருந்து வசதியும் செய்துத் தரப்படவில்லை. சாலை வசதியும் இல்லாமல், பேருந்து வசதியும் இல்லாமல் இப்பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.

இதேபோன்று திருவாலங்காடு கூட்டுச் சாலை முதல் அரக்கோணம் வரை செல்லும் சாலையும், கனகம்மா சத்திரத்தில் இருந்து திருவாலாங்காடு செல்லும் சாலையும், திருவாலங் காட்டில் இருந்து பழையனூர், மணவூர் வழியாக செல்லும் சாலையும் மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே தமிழ ்ந ாட்டின் கனிம வளமான மணலைக் கொள்ளையடித்துக் கொண்டு, சாலைகளை செப்பனிடாத, மின்வெட்டை நீட்டித்துக் கொண்டிருக்கின்ற த ி. ம ு.க. அரசைக் கண்டித்தும், த ி. ம ு.க. அரசின் உத்தரவின்பேரில், அரசியல் காழ்ப் புணர்ச்சி காரணமாக கல்வெட்டை இடித்துத் தள்ளிய நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொய் வழக்கு புனைந்த காவல் துறையைக் கண்டித்தும், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அ.இ.அ. த ி. ம ு.க. சார்பில், நாளை (4.11.2008) காலை 10 மணியளவில், காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும ்" எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments