Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை‌யி‌ல் போரை ‌நிறு‌த்துமாறு குர‌ல் கொடு‌க்க வே‌ண்டு‌ம்: ‌திருமா!

Webdunia
சனி, 1 நவம்பர் 2008 (16:09 IST)
செ‌ன்ன ை: இல‌ங்கை‌யி‌‌ல் போரை ‌நிறு‌த்துமாறு ‌சி‌றில‌ங்க அரசை இ‌ந்‌தியா வ‌லியுறு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று கோ‌ரி நா‌ம் அனைவரு‌ம் குர‌‌ல் கொடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌விடுதலை‌ச் ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி‌யி‌ன் தலைவ‌ர் தொ‌ல ். ‌ திருமாவளவ‌ன் கூ‌றினா‌ர்.

இல‌ங்கை‌யி‌ல் ‌விடுதலைக் கோ‌ரி‌ப் போராடி வரு‌ம் த‌மிழ‌ர்க‌ளி‌ன் ‌மீது ‌சி‌றில‌ங்க அரசு மே‌ற்கொ‌ண்டு வரு‌ம் கொலைவெ‌றி‌த் தா‌க்குத‌ல்களை‌க் க‌ண்டி‌த்து‌த் தெ‌ன்‌னி‌ந்‌திய நடிக‌ர்க‌ள் ச‌ங்க‌ம் சா‌ர்‌பி‌ல் செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று நட‌ந்து வரு‌ம் உ‌ண்ணா‌விரத‌த்‌‌தி‌ல் ப‌ங்கே‌ற்று போரா‌ட்ட‌த்தை வா‌ழ்‌த்‌திய ‌விடுதலை‌ச் ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி‌யி‌ன் தலைவ‌ர் தொ‌ல ். ‌ திருமாவளவ‌ன் பே‌சியதாவத ு:

இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்க‌ளை ‌பிழை‌க்க‌ப் போனவ‌ர்க‌ள் எ‌ன்று ந‌ம்‌மி‌ல் பல‌ர் நினை‌த்து‌க் கொ‌ண்டு‌ள்ளன‌ர். ‌பிழை‌க்க‌ப் போன இட‌த்‌தி‌ல் அமை‌தியாக‌ப் ‌பிழை‌க்க வே‌ண்டியதுதான ே, த‌னி நாடு கே‌ட்டு ஏ‌ன் போராட வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர்க‌ள் கே‌ட்‌கி‌ன்றன‌ர். இ‌ந்த எ‌‌ண்ண‌ம் தவறு. இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்களை‌ப் ‌பிழை‌க்க‌ப் போனவ‌ர்க‌ள் எ‌ன்று ‌நினை‌‌த்தா‌ல் அது ‌மிக‌ப்பெ‌ரிய வரலா‌ற்று‌ப் ‌பிழை. த‌மிழ‌ர்க‌ள் ‌பிழை‌க்க‌ப் போனவ‌ர்க‌ள் அ‌ல்ல. அவ‌ர்க‌ள் அ‌ந்த ம‌ண்‌ணி‌ன் பூ‌ர்‌வீக‌க் குடிம‌க்க‌ள்.

இ‌ன்னு‌ம் சொ‌ல்ல‌ப்போனா‌ல் ‌சி‌ங்கள‌ர்க‌‌‌ளி‌ன் வரலா‌‌ற்‌றி‌ல ், தா‌ங்க‌ள் பட‌கி‌ல் வ‌ந்து இல‌ங்கை‌யி‌ல் இற‌ங்‌கியபோது அ‌ங்கு வ‌சி‌த்து வ‌ந்த த‌மிழ‌ர்க‌ள் த‌ங்களை வரவே‌ற்றதாக அவ‌ர்களே கூறு‌கிறா‌ர்க‌ள். இத‌ன்மூல‌ம் த‌மிழ‌ர்க‌ள்தா‌ன் இல‌ங்கை‌யி‌ல் பூ‌ர்‌வீக‌க் குடிக‌ள், தா‌ங்க‌ள்தா‌ன் அயலவ‌ர்க‌ள் எ‌ன்று‌ம் அவ‌ர்களே ஒ‌த்து‌க்கொ‌ள்‌கி‌ன்றன‌ர்.

இல‌ங்கை‌யி‌ல் நட‌ந்துகொ‌ண்டிரு‌ப்பது வ‌ன்முறை வெ‌றியா‌ட்ட‌ம் எ‌ன்று ந‌ம்‌மி‌ல் ‌சில‌ர் கூறு‌கி‌ன்றன‌ர். அதுவு‌ம் தவறு. இல‌ங்கை‌யி‌ல் போராடுபவ‌ர்க‌ள் வ‌ன்முறை‌க் கு‌ம்ப‌ல் அ‌ல்ல. அ‌ங்கு நட‌ப்பது வ‌ன்முறை வெ‌றியா‌ட்ட‌ம் அ‌ல்ல. அது ‌விடுதலை‌ப் போரா‌ட்ட‌ம். த‌மிழ‌ர்க‌ளி‌ன் வா‌ழ்‌க்கை‌ப் போரா‌ட்ட‌ம்.

பால‌ஸ்‌தீன‌த்‌தி‌ல் யாச‌ர் அராப‌த ், தெ‌ன் ஆ‌ப்‌பி‌ரி‌க்கா‌வி‌ல் நெ‌ல்ச‌ன் ம‌ண்டேல ா, ‌ கியூபா‌வி‌ல் ஃ‌பிட‌ல் கா‌ஸ்‌ட்ரோ ஆ‌கியோ‌ர் தலைமை‌யி‌ல் நட‌ந்து‌‌ள்ள ‌விடுதலை‌ப் போரா‌ட்ட‌ங்க‌ளி‌ன் வ‌ரிசை‌யி‌ல ், இல‌ங்கை‌யி‌ல் நட‌ந்து வரு‌ம் போரா‌ட்டமு‌ம் ஒரு ‌விடுதலை‌ப் போரா‌ட்ட‌ம்தான்.

இல‌ங்கை‌யி‌ல் வாழு‌ம் த‌மிழ‌ர்களை நா‌ம் இ‌ந்‌திய‌ர்க‌ள் எ‌ன்று அழை‌க்க முடியாது. அவ‌ர்க‌ள் அ‌ந்த ம‌ண்‌ணி‌ன் பூ‌ர்‌வீக‌க் குடிக‌‌ள். இல‌ங்கை‌யிலு‌ம் இ‌ந்‌திய‌ர்க‌ள் வா‌ழ்‌கிறா‌ர்க‌ள ், அவ‌ர்க‌ள் மலையக‌த்‌தி‌ல் வா‌‌ழ்‌கிறா‌ர்க‌ள். சமதள‌த்‌தி‌ல் வாழு‌ம் த‌மிழ‌ர்க‌ள் பூ‌ர்‌வீக‌க் குடிம‌க்க‌ள். அ‌ந்த ம‌ண்ணோடு தோ‌ன்‌றியவ‌ர்க‌ள். அவ‌ர்க‌ளை இ‌ந்‌திய‌ர்க‌ள் எ‌ன்று அழை‌க்க முடியாது. அவ‌ர்க‌ள் த‌மிழ‌ர்க‌ள்.

இ‌ந்‌தியாவை ‌பி‌ரி‌ட்டி‌ஷ் ஆ‌ட்‌சியாள‌ர்க‌ள் ஆ‌ண்டபோது இல‌ங்கையு‌ம் அவ‌ர்க‌ள் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ல் இரு‌ந்தது. நெ‌ல்லையுட‌ன் இணை‌‌த்து இல‌ங்கையையு‌ம் அவ‌ர்க‌ள் ஆ‌ட்‌சி செ‌ய்தன‌ர். ஆனா‌ல் இ‌ந்‌தியா‌வி‌ற்கு 1947இ‌ல் சுத‌ந்‌திர‌ம் வழ‌ங்‌கிய ‌பி‌ரி‌ட்டி‌ஷ் ஆ‌ட்‌சியாள‌ர்க‌ள ், இல‌ங்கை‌க்கு 1948இ‌ல் சுத‌ந்‌திர‌ம் வழ‌ங்‌கின‌ர். இ‌வ்வாறு ‌பி‌‌ரி‌த்து‌ச் சுத‌ந்‌திர‌ம் வழ‌ங்‌கியத‌ன் மூல‌ம் இல‌ங்கை இன‌ப் ‌பிர‌ச்சனை‌க்கு அவ‌ர்க‌ள் காரணமா‌கி‌வி‌ட்டன‌ர்.

இல‌ங்கை‌க்கு ‌சீனா ஆயுத‌ம் கொடு‌க்‌கிறதெ‌ன்றா‌ல் அது அ‌ங்கு வாழு‌ம் பெள‌த்த மத‌த்‌தினரு‌க்கு ஆதரவாக‌க் கொடு‌க்‌கிறது. பா‌கி‌ஸ்தா‌ன் ஆயுத‌ம் கொடு‌க்‌கிறதெ‌ன்றா‌ல் அது இல‌ங்கை‌‌ப் ‌பிர‌ச்சனை‌யி‌ல் இ‌ந்‌தியா தலை‌யிட‌க் கூடாது எ‌ன்பத‌ற்காக‌க் கொடு‌க்‌கிறது. இ‌ந்‌தியா ஏ‌ன் ஆயுத‌ம் கொடு‌க்‌கிறத ு?

அ‌‌ப்படியானா‌ல் இ‌ல‌ங்கை‌யி‌ல் வ‌சி‌க்கு‌ம் த‌மிழ‌‌ர்க‌ளை‌விட ‌சி‌ங்கள‌ர்க‌ள்தா‌ன் இ‌ந்‌தியா‌வி‌ற்கு மு‌க்‌கியமாக‌ப்படு‌கிறது. அதனா‌ல்தா‌ன் ராடா‌ர ், ‌ பீர‌ங்‌கிக‌ள் உ‌ள்‌ளி‌ட்ட ப‌ய‌ங்கர அயுத‌ங்களை இல‌ங்கை‌க்கு இ‌ந்‌தியா கொடு‌த்து உதவு‌கிறது. இதனா‌ல் த‌மிழ‌ர்க‌‌ள் ‌மீதான தா‌க்குத‌ல்களு‌க்கு துணை போ‌கிறது. இதனை நா‌ம் க‌ண்டி‌க்க வே‌ண்டு‌ம்.

மேலு‌ம ், இல‌ங்கை‌யி‌ல் நட‌க்‌கி‌ன்ற போரை உடனடியாக ‌நிறு‌த்துமாறு நா‌ம் வ‌லியுறு‌த்த வே‌ண்டு‌ம். போரை ‌நிறு‌த்து‌ம்படி இல‌ங்கை அரசை வ‌லியுறு‌த்துமாறு ம‌த்‌திய அரசை நா‌ம் வ‌லியுறு‌த்த வே‌ண்டு‌ம். இதுவே நமது முத‌ல் கோ‌ரி‌க்கையாக இரு‌க்க வே‌ண்டு‌ம்.

இ‌வ்வாறு தொ‌ல ். ‌ திருமாவளவ‌‌‌ன் பே‌சினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments