Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்வெட்டை திசை திருப்பவே இலங்கை தமிழர் பிரச்சனை: ‌விஜயகா‌ந்‌த்!

Webdunia
வியாழன், 30 அக்டோபர் 2008 (05:04 IST)
தமிழ்நாட்டில் மின்வெட்டு, விலைவாசி உயர்வு போன்றவற்றிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே, முதல்வருக்கு இலங்கை தமிழர் பிரச்சனை பயன்பட்டது என்று த ே. ம ு. த ி. க தலைவர் விஜயகாந்த் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர ்.

webdunia photoFILE
இத ு தொட‌‌‌ர்பா க அவ‌ர ் வெளியிட்டு‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், '' இரண்டு வாரங்களுக்குள் இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென்றும், இல்லையென்றால் தமிழக நாடாளும‌ன் ற உறு‌ப்‌பின‌ர்க‌ள ் ராஜினாமா செய்வார்கள் என்றும் அனைத்த ு‌ க்கட்சி கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இரண்டு வாரங்களும் ஓடிவிட்டன. போர் நிறுத்தமும் செய்யப்படவில்லை. நாடாளும‌ன் ற உறு‌ப்‌பின‌ர்களு‌ம ் பதவி விலகவில்லை.

டெல்லிக்கு கொடுத்த தந்தி, மயிலை மாங்கொல்லை பொதுக் கூட்டம், அனைத்த ு‌ க ் கட்சி கூட்டம், நாடாளும‌ன் ற உறு‌ப்‌பின‌ர்க‌ள ் ராஜினாமா நாடகம், பிரதமருடன் தொலைபேசி தொடர்பு, மழையில் கட்டாய மனிதச் சங்கிலி என்றெல்லாம் முதல்வர், இலங்கைத் தமிழர் பிரச்சனையில் உணர்ச்சிப் பிழம்பாக ஆனார்.

பிறகு, இலங்கை அரசின் சிறப்பு பிரதிநிதி டெல்லி வருகை, சோனியா காந்தி தொலைபேசியில் முதல்வருடன் பேச்சு, வெளியுறவுத் துறை அமைச்சர் சென்னையில் முதல்வரை வீட்டில் சந்தித்தது போன்றவையெல்லாம் நடந்தவுடன், இலங்கை தமிழர் பிரச்சனையை காற்றுப்போன பலூனாக முதல்வர் ஆக்கிவிட்டார். இது ஒன்றும் புதிதல்ல. 1971ல் காவிரிப் பிரச்சனை, 1974ல் கச்சத் தீவு பிரச் ச னை போன்றவற்றை நாம் பார்த்துக்கொண்டுதானே வருகிறோம்.

இலங்க ை‌ த் தமிழர் பிரச்சனை, முதல்வரைப் பொருத்தவரையில் ஒரு தற்காலிக நிவாரணியாகவே இருந்தது. தமிழ்நாட்டில் மின்வெட்டு, விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவற்றிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப அவருக்கு பயன்பட்டது.

முதல்வர் கருணாநிதி, இலங்க ை‌ த ் தமிழர் பிரச்சனையில் நடந்துகொண்ட விதத்தை நாம் பாராட்டுவதைவிட, இலங்கை அதிபர் ராஜபக்சே வெகுவாக பாராட்டியுள்ளார்.

முதல்வர் முதிர்ந்த அரசியல்வாதி என்றும், இலங்கையின் ஒருமைப்பாட்டிற்கும் தமிழர் பிரச்சனைக்கும் தீர்வுகாண பாடுபடுகிறார் என்றும், மத்திய அரசின் அனுமதியோடு தங்கள் நாட்டிற்கு அவர் விஜயம் செய்ய வேண்டுமென்றும் இலங்கை அதிபர் வேண்டுகோள் விட்டதில் இருந்து, இலங்க ை‌ த ் தமிழர் பிரச்சனையில் எத்தகைய மகத்தான பணியை முதல்வர் ஆற்றியிருக்கிறார் என்பது தமிழக மக்களுக்கு நன்கு புரியும ்'' எ‌ன்ற ு ‌ விஜயகா‌ந்‌த ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments