Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
தமிழர்களை மறந்துவிட்டார் கருணாநிதி: ஜெயலலிதா!
Webdunia
புதன், 29 அக்டோபர் 2008 (04:01 IST)
'' தனது கட்சி எம்.பி.க்களின் பதவி விலகல் கடிதங்களைக் கொடுக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருக்கும் கருணாநிதி, தற்போது நடைபெறும் இலங்கைப் போரில் வீடுகளை இழந்து இடம் பெயர்ந்துள்ள ஆயிரக்கணக்கான தமிழர்களை மறந்துவிட்டார்'' என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டார் முதல்வர் கருணாநிதி. அவர், தனது கட்சி எம்.பி.க்களின் பதவி விலகல் கடிதங்களைக் கொடுக்க வேண்டாம் என்ற முடிவுக்கும் வந்து விட்டார்.
இதன் மூலம் மத்திய அரசுக்கு வரக்கூடிய மிகப்பெரிய ஆபத்தைத் தவிர்த்துவிட்டார். இதற்குப் பரிகாரமாக தி.மு.க. அரசைத் தாங்கிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தி.மு.க.வுக்கு ஆதரவாக நடந்து கொள்வர் என, காங்கிரஸ் சார்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது.
கருணாநிதியின் மகள் கனிமொழி, தனது பதவி விலகல் கடிதத்தை ராஜ்யசபா தலைவரிடம் அளிக்காமல், தனது தந்தையிடம் அளித்து நாடகத்தைத் துவக்கியபோதே, இந்த நாடகத்தின் முடிவு இப்படித்தான் இருக்கும் என்பதை நான் அறிவேன்.
தற்போது நடைபெறும் இலங்கைப் போரில் வீடுகளை இழந்து இடம் பெயர்ந்துள்ள ஆயிரக்கணக்கான தமிழர்களை மறந்துவிட்டார் கருணாநிதி. அண்மைக் காலங்களில் கிட்டத்தட்ட 500 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை மறந்து விட்டார்.
இலங்கைத் தமிழர்களின் ரட்சகர் தான் தான் என்பதை பறைசாற்றிக் கொள்ள பள்ளிச்சீருடையில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர்களைக் கட்டாயப்படுத்தி, கொட்டும் மழையில் நிற்க வைத்து, மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தியதை மறந்து விட்டார்.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான கருத்துக்களை வெளிப்படையாகத் தெரிவித்து அதற்காக தற்போது சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருக்கும் திரைப்படத் துறையினரைக் கூட மறந்து விட்டார். மத்திய ஆட்சியில் இருப்பவர்களும் கருணாநிதியின் இந்தக் கபட நாடகத்தின் துணை நடிகர்கள். எனவே, கருணாநிதியை பதவி விலகச் சொல்லி அவருக்கு தமிழக மக்கள் தந்திகள் அனுப்ப வேண்டும்'' என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!
ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!
கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!
புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?
Show comments