Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனல் மின் நிலையங்களி‌ல் நிலக்கரி கையிருப்பு : மின்சார வாரியம்!

Webdunia
திங்கள், 27 அக்டோபர் 2008 (13:15 IST)
தமிழகத்தில் உள்ள நான்கு அனல் மின் நிலையங்களுக்கும் தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளது என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு மின்சார வாரியம ் வெளியிட ்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், தமிழகத்தில் உள்ள நான்கு அனல் மின் நிலையங்களுக்கும் தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளது. நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் உள்ள எந்த அனல் மின் நிலையமும் உற்பத்தியை நிறுத்தியதில்லை.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நான்கு நாள்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளது. தூத்துக்குடி துறைமுகத்தில் இரண்டு கப்பல்களில் சுமார் 75,000 மெட்ரிக் டன் நிலக்கரி மேற்படி நிலையத்துக்கு இறக்கிக் கொண்டுள்ளன. இதைத்தொடர்ந்து அடுத்த இரண்டு அல்லது மூன்று நாள்களில் மேலும் இரண்டு கப்பல்களில் சுமார் 75,000 மெட்ரிக் டன் நிலக்கரி வந்து சேரும்.

இதன்மூலம் எவ்வித நெருக்கடியுமின்றி நிலக்கரி வழங்கப்பட்டு வருகின்றது. இதுபோலவே மற்ற மூன்று மின் நிலையங்களுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் நிலக்கரி வழங்கப்பட்டு வருகின்றது.

இந்தியாவில் உள்ள 77 அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பை மத்திய மின்சார ஆணையம் கண்காணித்து பட்டியலிட்டு வருகிறது. அவர்கள் வெளியிடும் பட்டியலில் பொதுவாக அனல் மின் நிலையங்களின் கையிருப்பு 4 நாட்களுக்கும் குறைவாக வைக்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது. இதைஒப்பிடும்போது, தமிழக அனல் மின் நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு கூடுதலாக உள்ளதுடன், தொடர்ந்து கப்பல்கள் மூலம் நிலக்கரி வழங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் உள்ள அனல் மின் நிலையங்களில் கடந்த 5 மாதக் காலத்தில் உற்பத்தி செய்த மின் அளவு, கடந்த ஆண்டு இதே காலக் கட்டத்துடன் ஒப்பிடும்போது 63.90 கோடி யூனிட்டுகள் அதிகமாக உள்ளது என்று மின் வாரியம் அறிவித்துள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments