Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல‌ம் ‌கிடை‌த்தா‌ல் பால‌ம் அமை‌க்கலா‌ம் : கருணாநிதி!

Webdunia
திங்கள், 27 அக்டோபர் 2008 (12:12 IST)
'' தேர்தல் வெற்றி எனும் பலம் கிடைத்தால், பல்வேறு பாலங்களை அமைக்கலாம் என்று முத லமை‌ச்ச‌ர் கருணாநிதி தெரிவித்தார்.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் கட்டப்பட் ட க‌த்‌தி‌ப்பாரா மேம்பா ல‌த்தை ‌தி‌ற‌ந்து வை‌த்து முத‌லமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி பேசுகை‌யி‌ல், பாலம் என்றாலே ஒருவரையொருவர் இணைப்பத ு, இரண்டுபொருள்களை இணைப்பது பாலம ், இரண்டு இடங்களை இணைப்பது பாலம ். பாலம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தும் போது இருவருக்கும் இடையே பாலமாக இருக்கிறார் என்று சொன்னால் இருவரையும் ஒற்றுமைப்படுத்த ி, ஊருக்கு நன்மை செய்யப்பாடுபடுகிறார் என்று பொருள ்.

மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் ஜாதகமோ என்னவோ, அவர் எங்கே பாலம் கட்டினாலும் அதில் ஒரு பிரச ் சனை வருகிறத ு. சேது சமுத்திரத் திட்டத்திற்காக ஒரு பாலம் கட்டுகிறார், அதிலே எவ்வளவு பெரிய பிரச்சனை வந்திருக்கிறது என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். சேது சமுத்திரத் திட்டம் வரையிலே பாலு பணியாற்றுகின்ற பாலு திட்டமிட்டு நடத்துகின்ற பாலங்கள் பிரச்சனைக்கு உள்ளாகியிருக்கின்றன. அவர் கட்டுகின ்ற அந்த பாலம் உச்ச நீதிமன்றம் வரையிலே சென்று தீர்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கின்றத ு.

அந்த பாலம் நாம் நினைத்தபடி சேது சமுத்திரத் திட்டத்திற்கான பாலமாக அமைய வேண்டுமேயானால் பாலத்திற்கு கால் ஒடிய வேண்டும ், அதாவது பாலத்திற்கு காலை ஒடித்து பார்த்தீர்களேயானால் பாலம், பலம் என்று ஆகும். அந்த பலத்தை நாமெல்லாம்பெற வேண்டும். அந்த பலத்தைப் பெறுவதற்குத் தான் நம்முடைய ஜி.கே.வாசன் சொன்னார்கள். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் செய்துள்ள சாதனைகளை யெல்லாம் எண்ணிப்பார்த்து எங்களுக்கு மீண்டும் வெற்றியைத் தாருங்கள் என்று கேட்டார்கள்.

அது தான் பாலத்தை பலம் என்று ஆக்குதல ், அந்த பலத்தை நாம் பெறுவோமேயானால், ஒரு பாலம் அல்ல, சேது சமுத்திரப் பாலம் அல்ல, பல பாலங்கள் நாம் அமைக்க முடியும், அதற்கான வழிவகைகள் உங்களுடைய கையிலே தான் இருக்கின்றன எ‌ன்று கருண‌ா‌நி‌தி கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments