Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொட்டும் மழை‌யி‌ல் மனித‌ச்சங்கிலி: கருணா‌நி‌தி துவ‌‌க்‌கி வை‌த்தா‌ர்!

Webdunia
வெள்ளி, 24 அக்டோபர் 2008 (16:40 IST)
இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தியும், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும் அனைத்த ு‌க ்கட்சிகள் சார்பில் மாபெரும் மனித சங்கிலி அணிவகுப்பு இன்று ‌ பி‌ற்பக‌ல் கொ‌ட்டு‌ம் மழை‌யி‌ல் நடைபெ‌ற்றது. செ‌ன்னை மா‌வ‌ட்ட ஆ‌‌ட்‌சி‌ய‌ர் அலுவலக‌ம் அரு‌கி‌ல் முதலமைச்சர் கருணாநிதி அ‌ணிவகு‌ப்பை தொடங்கி வ ை‌த்தா‌ர்.

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் கொலை செய்யப்படுவதை கண்டித்தும், இலங்கையில் அமைதி ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வற்புறுத்தியும், அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வற்புறுத்தியும் சென்னையில் அ‌க்டோப‌ர் 21ஆ‌‌ம் தே‌தி மனிதச் சங்கிலி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட இந்த ம‌னித‌ச்ச‌ங்‌கி‌லி அணிவகுப்பு இன்று பிற்பகல் 3 மணி‌க்கு தொட‌ங்‌கியது. இ‌ந்த ம‌னித‌ச்ச‌ங்‌கி‌லி அ‌ணிவகு‌ப்பு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

மனித சங்கிலி அணிவகுப்பை தொட‌ங்‌கி வை‌த்த முதலமைச்சர் கருணாநிதி, திறந்த `ஜீப்' மூலம் மனித சங்கிலி நடைபெறும் இடங்களை சென்று பார்வையி‌ட்டா‌ர்.

மாவட்ட ஆ‌ட்‌‌சிய‌ர் அலுவலகம் முதல் அண்ணா சிலை வரை, வடசென்னையை சேர்ந்தவர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள், வழ‌க்க‌றிஞ‌ர்களுட‌ன் அமைச்சர் ஆற்காடு வீராசாமி கலந்துகொ‌ண்டு‌ள்ளா‌ர்.

அண்ணாசிலை முதல் கிண்டி வரை, மாணவர்கள் மற்றும் பா.ம.க.வினர் அ‌ணிவகு‌ப்‌பி‌ல் ப‌ங்கே‌ற்று‌ள்ளன‌ர். அவர்களுடன் அமைச்சர்கள் துரைமுருகன், க.பொன்முடி ஆகியோர் கலந்துகொ‌ண்டு‌ள்ளன‌ர்.

தேனாம்பேட்டையில் இருந்து கிண்டி மேம்பாலம் வரை ஜனநாயக முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜெகத்ரட்சகன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் கலந்துகொ‌ண்டு‌ள்ளன‌ர்.

கிண்டி முதல் தாம்பரம் வரை, திரைப்பட துறையினர் மற்றும் தென்சென்னையை சேர்ந்தவர்களுடன் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ப‌ங்கே‌ற்று‌ள்ளா‌ர்.

தாம்பரம் முதல் சிவானந்த குருகுலம் வரை, காஞ்‌சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தினருடன் ஆலந்தூர் பாரதி உ‌ள்பட ப‌ல்வேறு மு‌க்‌கிய ‌பிரமுக‌ர்க‌ள் கல‌ந்து கொ‌ண்டு‌ள்ளன‌ர்.

சிவானந்த குருகுலம் முதல் செங்கல்பட்டு வரை வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுடன் அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், எ.வ.வேலு ஆகியோரு‌ம், செங்கல்பட்டு முதல் பிறமாவட்டங்களை சேர்ந்தவர்களுடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி ஆகியோரு‌ம் ப‌ங்கே‌ற்று‌‌ள்ளன‌ர்.

இந்த மனித‌ச்சங்கிலி அணிவகுப்‌பி‌ல் பல்வேறு கட்சிகளும், அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் உள்பட பல்வேறு சங்கங்களும் கலந்துகொ‌ண்டு‌ள்ளன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments