Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேரூராட்சி ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணை: மு.க.ஸ்டாலின் வழங்கினார்!

Webdunia
புதன், 22 அக்டோபர் 2008 (13:56 IST)
பேரூராட்சி ஆய்வாளர்களாக தே‌ர்வு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள 190 பே‌ரி‌ல் 186 நப‌ர்களு‌க்கு பணி நியமன ஆணையினை அமைச்சர் மு.க.ஸ்டாலின் இ‌ன்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.

இத ு கு‌றி‌த்த ு தமிழக அரசு இ‌ன்ற ு வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள செய்த ி‌ க்கு‌றி‌ப்‌பி‌ல ்," பேரூராட்சிகள் துறையில், அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம், சிறிய மற்றும் நடுத்தர நகரங்களுக்கான அடிப்படை வசதி மேம்பாட்டுத் திட்டம், ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்புத் திட்டம், நகர்ப்புற ஏழைகளுக்கான அடிப்படை வசதி மேம்பாட்டுத் திட்டம், ஒருங்கிணைந்த வீட்டு வசதி மற்றும் குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டம், குறைந்த பட்ச தேவைத் திட்டம் போன்ற அத்தியாவசியமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இத்திட்டப் பணிகளை செயல்படுத்த பேரூராட்சித் துறை பொறியியல் பிரிவில் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டுள்ளது. இத ு தொடர்பா க அரசு ஏ‌ற்கனவே நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கட‌ந் த ஆ‌ண்ட ு செ‌‌ப்ட‌ம்ப‌ர ் 5 ஆ‌ம ் தே‌த ி 250 பணி ஆய்வாளர் பணியிடங்களை புத்தாக்கம் செய்து ஆணையிடப்பட்டது.

இதனடிப்படையில் பேரூராட்சிகளில், ஐ.டி.ஐ., டி.சி.இ., டி.இ.இ., டி.எம்.இ., பி.இ. போன்ற தொழிற்கல்வி தகுதி பெற்று, 10 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக அடிப்படையில் பணித் தொகையில் கூலி பெறும் பணியாளர்களாக பணிபுரிந்து வந்த 190 பணியாளர்களின் நலனை பரிசீலித்து அரசு, அவர்களை பணி ஆய்வாளர்களாக ரூ.3,050-75-3,950-80-4,590 என்ற முறையான ஊதிய ஏற்ற விகிதத்தில் மாநில அளவில் பணியமர்த்தி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கட‌ந் த செ‌‌ப்ட‌ம்ப‌ர ் 9 ஆ‌ம ் தே‌த ி ஆணை வெளியிட்டுள்ளது.

இ‌வ்வாறு நியமனம் செய்யப்பட்ட நபர்களுக்கான பணி நியமன ஆணையினை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இ‌ன்று வழங்கினார். பணித் தொகையில் கூலிபெறும் பணியாளர்களை, முறையான ஊதிய ஏற்ற விகிதத்தில் பணியமர்த்தி பணி நியமன ஆணை வழங்கப்பட்டது இத்துறையில் இதுவே முதன்முறையாகும ்" எ‌ன்ற ு கூ‌ற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments