Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பு‌திய கூடுத‌ல் ‌மி‌ன்க‌‌ட்டண‌ம் ர‌த்து : த‌மிழக அரசு அ‌றி‌வி‌ப்பு!

Webdunia
புதன், 22 அக்டோபர் 2008 (12:38 IST)
" எதிர்க்கட்சி க‌ ளி‌ன ் குரலுக்கு மதிப்பளித்து வீடுகளுக்கு 600 யூனிட் என்பதை மாற்றி, யூனிட் கணக்கு இல்லாமல் எல்லா வீடுகளுக்குமே கூடுதல் தொகை வசூலிக்கப்படமாட்டாது" என்று த‌மிழக அரசு அற‌ி‌வி‌த்து‌ள்ளது.

இது தொட‌ர்பாக த‌மிழக அரசு இ‌ன்ற ு வெ‌ளி‌‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், "கடந்த காலத்தில் தமிழகத்தில் மின் உற்பத்தித் திறன் போதுமான அளவிற்கு நிறுவப்படாத நிலையில், எதிர்பாராதவிதமாக இந்த ஆண்டு மின் பற்றாக்குறை ஏற்பட்டு; மின்வெட்டு ச ெ‌ ய்ய வேண்டிய தவிர்க்க முடியாத சூழலில், பெரும்பாலும் விவசாயிகளையும், வீடுகளையும் பாதிக்காத அளவுக்கு கிடைக்கும் மின்சாரத்தைப் பகிர்ந்தளிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு, அதனையொட்டி 20.10.2008 அன்று மின்சார விநியோகக் கட்டுப்பாட்டு முறையொன்று அறிவிக்கப்பட்டது.

சீராகவும், சிக்கனமாகவும், மின்சாரம் பயன்படுத்தப்பட்டு அத்தியாவசியமான நிலையில் எல்லோருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென்ற நல்ல நோக்கத்துடன் அந்த அறிவிப்பு ச ெ‌ ய்யப்பட்டுள்ள போதிலும், அதனால் 600 யூனிட்டுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் வீடுகள்
பாதிக்கப்படக் கூடும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

மின்சாரத்தை வீடுகளில் பயன்படுத்துவோர் ஒரு கோடியே 30 லட்சம் பேர் என்ற எண்ணிக்கையில் நேற்று ச ெ‌ ய்த அறிவிப்பால் பாதிக்கப்படுவோர் எனப்படும் எண்ணிக்கை வெறும் 5 லட்சம் பேர் தான் எனினும், எதிர்க்கட்சிகளைச் சார்ந்தோர் குரலுக்கு மதிப்பளித்து வீடுகளுக்கு 600 யூனிட் என்பதை மாற்றி, யூனிட் கணக்கு இல்லாமல் எல்லா வீடுகளுக்குமே கூடுதல் தொகை வசூலிக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்படுகிறத ு" எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments