Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்களுக்கு 20 ‌விழு‌க்காடு போனஸ்: கருணாநிதி உத்தரவு!

Webdunia
செவ்வாய், 14 அக்டோபர் 2008 (14:38 IST)
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகப் பணியாளர்களுக்கு 20 ‌ விழு‌க்காடு போன‌ஸ் வழ‌ங்கவு‌ம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு முதன் முறையாக இந்த ஆண்டு ரூ.1,000 கருணைத் தொகை வழங்கவும் முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

இது தொட‌ர்பாக தமிழக அரசு இ‌‌‌ன்று வெளியிட்டுள்ள செய்த ி‌க ்குறிப்பில ், "2007-2008ஆ‌ம ் ஆண்டிற்கு தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகப் பணியாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கக் கோரி தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் எம்ப்ளாயீஸ் ய ூனியன் உள்ளிட்ட அனைத்து சங்கங்களும் அரசுக்கு கோரிக்கை சமர்ப்பித்திருந்தன.

2007-2008 ஆ‌ம ் ஆண்டுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகப் பணியாளர்கள், பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட 8.33 ‌விழு‌க்காட ு போனஸ் மற்றும் 11.67 ‌விழு‌க்காட ு கருணைத் தொகை, ஆக மொத்தம் 20 ‌விழு‌க்காட ு வழங்கவும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு முதன் முறையாக இந்த ஆண்டு ரூ.1,000 கருணைத் தொகை வழங்கவும் முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

இதன் மூலம், 16,340 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகப் பணியாளர்கள், பருவகாலப் பணியாளர்கள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு போனசும், கருணைத் தொகையும் ரூ.10.76 கோடி வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் 13,226 சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு ரூ.1.32 கோடி கருணைத் தொகை வழங்கப்படுகிறத ு" எ‌ன்று கூ‌ற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments