Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துப்புரவு பணியாளர்கள் பாதாள சாக்கடைக்குள் இறங்க தடை!

Webdunia
திங்கள், 13 அக்டோபர் 2008 (17:32 IST)
மனித கழிவுகளை அகற்றும் துப்புரவு பணியாளர்கள் பாதாள சாக்கடைக்குள் இறங் க செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் இடை‌க்கால தடை ‌வி‌த்து‌ள்ளது.

மது போதைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் சார்பில் நாராயணன் என்பவர் செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் பொது நல வழக்க தொடர்ந்துள்ளார்.

அதில ், '' சென்னையில் உள்ள பாதாள சாக்கடையில் மனித கழிவுகளை அகற்றும் பணியில் துப்புரவு தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகி றார்கள். இந்த பணியில் ஈடுபடும் தொழிலாளர ்க‌ள் பெரும்பாலானோர் மது குடித்து விட்டு உள்ளே இறங்குகிறார்கள்.

ஏற்கனவே சாக்கடை குழாய்களில் மீத்தேன் வாயு அதிகமாக இருக்கும். எனவே துப்புரவு தொழிலாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடும். மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதை கைவிட வேண்டும். இந்த தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் மாற்றுத்தொழில் ஏற்பாடு செய்ய வேண்டும ்'' எ‌ன்று மனு‌வி‌ல் கூறியுள்ளார்.

இ‌ந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கங்குலி, நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா ஆகியோர், துப்புரவு தொழிலாளர்கள் பாதாள சாக்கடைக்குள் இறங்க இடைக்கால தடை விதித்தனர்.

மேலும் வரும் 15 ஆ‌ம் தே‌தி‌க்கு‌ள் பதில் அளிக்குமாறு சென்னை தரமணியில் உள்ள தேசிய சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கும், தமிழக அரசுக்கும் தா‌க்‌கீது அனுப்ப உத்தரவிட்டனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments