கோவையில் ரஜினி ரசிகர்கள் ஒன்றுகூடி ‘தேசிய திராவிட மக்கள் முன்னேற்ற கழகம்‘ என்ற கட்சியை தொ டங்கி உள் ளனர். இதற்கு ரஜின ிகாந்த் அனுமதி கொடுக்காவிட்டால் சென்னையில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
webdunia photo
WD
சூப்பர ் ஸ்டார ் ரஜினிகாந்த ் அரசியலுக்க ு வரவேண்டும ் எ ன அவரத ு ரசிகர்கள ் நீண்டகாலமா க கோரிக்க ை விடுத்த ு வருகின்றனர ். இந்நிலையில் அக்டோபர் 15ஆம் தேத ி முதல் ரசிகர ் மன் ற நிர்வாகிகள ை ரஜின ிகாந்த் சந்திப்பதற்க ான ஏற்பாடுகள ் நடந்த ு வருகின்ற ன.
இந்தநிலையில் கோவை மாவட்ட ரஜின ிகாந்த் ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகிகள் 'தேசிய திராவிட மக்கள் முன்னேற்ற கழகம ்' என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளனர். மேலே சிவப்பு, நடுவில் வெள்ளை, அடியில் கறுப்பு என்ற மூவர்ண கொடியையும் அறிமுகப்படுத்த ியுள்ள னர். நடுவில் உள்ள வெள்ளை நிறத்தில் ரஜின ிகாந்த் உருவம் பொறித்த நட்சத்திரம் பொறிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களை சிதறவிடாமல் தடுக்க நாமும் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என தலைவரிடம் தொடர்ந்து வலியுறுத்தியும் மவுனம் சாதிக்கிறார். அவர் காலம் தாழ்த்துவது தமிழக மக்களுக்கு ஆபத்து. நாங்கள் 15 வயதில் ரசிகர் மன்றத்தில் சேர்ந்தோம். இன்று 40 வயதை தாண்டி விட்டோம். எத்தனை நாளைக்குத்தான் ரஜினி ரசிகராகவே இருப்பது. அரசியல் முத்திரை இருந்தால் மட்டுமே மக்களுக்கு மிக எளிதாக சேவை செய்ய முடியும்.