மின்வெட்டைக் கண்டித்து விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஒன்றியம் சத்திரப்பட்டி மின்சார அலுவலகம் முன்பு வரும் 7ஆம் தேதி அ.இ.அ. த ி. ம ு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார ்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில ், " விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சத்திரப்பட்டி, சங்கரபாண்டியபுரம ், சமுசிகாபுரம் பகுதிகளில் சுமார் 5,000 விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதனை நம்பி 10,000 தொழிலாளர்களும், இதனைச் சார்ந்த மற்ற தொழில்களை நம்ப ி 5,000 தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.
த ி. ம ு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மையால் விருதுநகர் மாவட்டத்தில் வாரத்திற்கு ஒர ு நாள் கட்டாய மின்சார விடுமுறையும், தினசரி பல மணி நேர மின்வெட்டும் அமலில் இருக்கின்றன.
இதன் விளைவாக, தொழிலாளர்களுக்கு ஒரு வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை கிடைக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மீதமுள்ள 3 நாட்கள் அவர்களுக்கு வேலை இல்லாத சூழ்நிலை ஏற்படுகிறது. அதாவது, கிட்டத்தட்ட மாதத்திற்கு பாதி நாட்கள் தொழிலாளர்கள் வேலையின்றி இருக்கிறார்கள்.
எனவ ே, இதற்கெல்லாம் காரணமான த ி. ம ு.க. அரசைக் கண்டித்து விருதுநகர் மாவட்ட அ.இ.அ. த ி. ம ு.க. சார்பில் வரும ் 7 ஆம ் தேத ி ( செவ்வாய்கிழம ை) காலை 10 மணியளவில் ராஜபாளையம் ஒன்றியம் சத்திரப்பட்டி மின்சார அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" என்று ஜெயலலிதா கூறியுள்ளார ்.