Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்.எல்.சி. தொழிலாளர்கள் வேலை நிறுத்த‌ தா‌க்‌கீது!

Webdunia
புதன், 1 அக்டோபர் 2008 (12:09 IST)
என்.எல்.சி. தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொக ை உள்ளிட்ட ப‌‌ல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என‌்று‌ம் இல்லாவிட்டால் அ‌க்டோப‌ர ் 14 ஆ‌ம ் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் தொடங்க உள்ளோம் எ‌ன்று‌ம் எ‌ன்.எ‌‌ல்.‌சி. ‌நி‌ர்வாக‌த்து‌க்கு தொ.மு.ச தா‌க்‌கீது கொடு‌த்து‌ள்ளது.

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமான தொ.மு.ச. சார்பில் என்.எல்.சி. தலைமை நிர்வாக இயக்குநர் பாபுராவிடம் ஒரு தா‌க்‌கீது கொடுக்கப்பட்டது.

அ‌ந்த மனு‌வி‌ல், 'என்.எல்.சி. ஊழியர்கள ், தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை, போக்குவரத்துபடி, ஊதியமாற்ற ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் அ‌க்டோப‌ர் 14ஆ‌ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் தொடங்க உள்ளோம் என்பதை நிர்வாகத்தின் கவனத்துக்கு தெரிவித்த ு‌க் கொள்கிறோம ்' என குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் என்.எல்.சி.யின் அங்கீகரிக்கப்பட்ட மற்றொரு தொழிற்சங்கமான பாட்டாளி தொழிற்சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.

இ‌ந்த கூட்டத்தில் என்.எல்.சி. ஊழியர் க‌ள், தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை, போக்குவரத்துப்படி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற அ‌‌க்டோப‌ர் 6ஆ‌ம் தேதி வரை கெடு விதிப்பது எ‌ன்று‌ம் அதன்பின் அ‌க்டோப‌ர் 7 ம‌ற்று‌ம் 8 ஆகிய தேதிகளில் வாயிற்கூட்டமும், 9 ஆ‌ம் தேதி பொதுக்கூட்டமும் நடத்துவது என்றும், 10 ஆ‌ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments