Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோ‌டு மாநகரா‌ட்‌சி தி.மு.க. உறு‌ப்‌‌பின‌ர் அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்தார்!

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி!

Webdunia
ஈரோடு மாவட்டத்தில ் மாநகரா‌ட்‌சி தி.மு.க. பெண் உறு‌ப்‌பின‌ர் உட்பட பல்வேறு ஊராட்சி தலைவர்கள் அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்துள்ளனர். இதனால் ஈரோடு மாவட்ட தி.மு.க.வில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாநகராட்சி 31 வது வார்டு சுயேட்சை உறு‌ப்‌பின‌ர் வசந்தா, 42 வது வார்டு தி.மு.க. உறு‌ப்‌பின‌ர் நீலாவதி, வெள்ளோடப்பரப்பு பேரூராட்சி தலைவர் தவமணி, துணை தலைவர் சண்முகம், ஆறாவது வார்டு உறுப்பினர் சேகர் சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஓட்டப்பாறை ஊராட்சி தலைவர் திருமூர்த்தி ஆகியோர் சென்னை சென்று அ.இ.அ.தி.மு.க. பொதுசெயலர் ஜெயலலிதா முன்‌னிலை‌யி‌ல் அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

ஈரோடு மாநகராட்சியில் தி.மு.க.-19, அ.இ.அ.தி.மு.க.-10 காங்கிரஸ்- 8, ம.தி.மு.க. - 2 மற்றும் தே.தி.மு.க. ஒன்றும் இதுதவிர ஐந்து சுயேட்சைகளும் சேர்ந்து மொத்தம் 45 உறு‌ப்‌பின‌ர்க‌ள் உள்ளனர். தற்போது தி.மு.க.-18 ஆகவும் அ.இ.அ.தி.மு.க.- 11 ஆகவும் மாறியுள்ளது.

மேலும் ஈரோடு மாவட்டத்தில் தி.மு.க.வினர் அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்ததால் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments