Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஞ்சலகங்கள் மூலம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.35 கோடி கடனுதவி!

Webdunia
திங்கள், 29 செப்டம்பர் 2008 (19:41 IST)
தமிழகத்தில் சிவகங்கை, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் அஞ்சலகங்கள் மூலம் ரூ.1.35 கோடி கடனுதவி மக‌ளி‌ர ் சுய உதவிக் குழுக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஐந்து மாவட்டங்களில் சுமார் 2,900 சுயஉதவிக்குழுக்கள் அஞ்சலகங்களின் கடனுதவியுடன் அமைக்கப்பட்டுள்ளன. ஒன்பது அஞ்சலக வட்டாரங்களில் உள்ள 2,000 அஞ்சலகங்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளன.

அஞ்சலகங்கள் வழங்கும் கடனுக்கு ஒன்பது விழுக்காடு வட்டி வசூலிக்கப்படுகிறது. இதில் இந்திய அஞ்சல்துறைக்கு 3 விழுக்காடும், நபார்டு வங்கிக்கு 6 விழுக்காடும் பங்கு உள்ளது.

இத்திட்டம் அஞ்சல்துறை வழங்கும் நிதி மற்றும் காப்பீட்டு சேவைகளை சுய உதவிக்குழு உறுப்பினர்கள் வாயிலாக விற்பனை செய்யவும் உதவுகிறது.

அஞ்சலகங்கள் மூலம் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி அளிக்கும் இ‌த ்திட்டம் பீகார், குஜராத், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, ஒரிசா, உத்தரப் பிரதேசம், வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவைகளுக்கு விரிவுப்படுத்த இந்திய அஞ்சல்துறை திட்டமிட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தவ் தாக்கரே தோல்வி எதிர்பார்த்தது தான்.. அவர் ஒரு அரக்கன்: கங்கனா ரனாவத்

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த புகார்களுக்கு தனி இணையத்தளம்: தவெக தலைவர் விஜய்

இன்னும் சில நிமிடங்களில் நாடாளுமன்ற கூட்டம்: பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் பிரதமர் மோடி!

கூகிள் மேப்பை நம்பி இடித்த பாலத்தில் பயணம்! ஒட்டு மொத்தமாக பலியான பயணிகள்! - உத்தர பிரதேசத்தில் சோகம்!

Show comments