Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு மின்‌‌‌‌‌விசை ‌நி‌தி நிறுவனம் ரூ.4 கோடி ஈவு‌த் தொகை!

Webdunia
திங்கள், 29 செப்டம்பர் 2008 (16:26 IST)
தம ி‌ ழ்நாடு மின்விசை நிதி, அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் சா‌ர்‌பி‌ல் 2007-2008ஆம் ஆ‌ண்டு‌க்கான ஈவு‌த் தொகையாக ரூ.4.40 கோடி‌க்கான காசோலையை முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி‌யிட‌ம், ‌மி‌ன்சார‌த் துறை அமை‌ச்ச‌ர் ஆ‌ற்காடு ‌வீராசா‌மி இ‌‌ன்று வழ‌ங்‌கினா‌ர்.

தம ி‌ ழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் (பவர்ஃபைனான்ஸ்) 2007-2008ஆம் ஆண்டில் வரிக்குப்பின் நிகர இலாபமாக ரூ.32.28 கோடி ஈட்டியுள்ளது.

இதுவரை ரூ.2,943 கோடி நிகர வைப்பீட்டுத் தொகையாக இந்நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிறுவனத்தின் பங்கு முதலீட்டின் மீது 2007-2008ஆ‌ம் ஆண்டிற்கு 20 ‌விழு‌க்காடு இடைக்கால ஈவுத்தொகையாக ரூ.4.40 கோடியை அரசுக்கு வழங்க முடிவு செ‌ய்தது.

அதன்படி ஈவுத்தொகைக்கான காசோலையை முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி‌யிட‌ம், மின்சாரத்துறை அமைச்சர் ஆ‌ற்காடு ‌வீராசா‌மி இ‌ன்று வழங்கினார்.

1995-96 ஆ‌ம் ஆண்டு முதல் மொத்த ஈவுத்தொகையாக இதுவரை ரூ.52.02 கோடியை பவர்ஃபைனான்ஸ் தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது. மேலும் இந்நிறுவனம் இதுவரை நிகர இலாபமாக ரூ.272.29 கோடி ஈட்டியுள்ளது எ‌ன்று த‌மிழக அரசு வெ‌ளி‌‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments