Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ர்நாடகாவு‌க்கு நாளை நள்ளிரவு முதல் 1000 லாரிகள் செ‌ல்லாது!

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி!

Webdunia
திங்கள், 29 செப்டம்பர் 2008 (12:07 IST)
நாளை நள்ளிரவு முதல் சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு செல்லும் ஆயிரம் லாரிகள் நிறுத்தப்படும் என்று லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி தெரிவித்தார்.

இது தொட‌ர்பாக அவ‌ர் ‌வ ிடுத்துள்ள அறிக்கையில ், '' கர்நாடகா மாநிலத்தில் லாரிகளுக்கு வேககட்டுப்பாட்டு கருவி பொருத்தவேண்டும் என்ற சட்டத்தை திரும்ப பெறவேண்டும் எனகோரி அம்மாநில லாரி உரிமையாளர்கள் நாளை செவ்வாய்கிழமை நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர். இதற்கு தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு அளிக்கிறது.

சத்தியமங்கலத்தில் இருந்தும் இந்த வழியாகவும் நாள் ஒன்றுக்கு சுமார் ஆயிரம் லாரிகள் கர்நாடகா மாநிலத்திற்கு சென்று அங்கிருந்து காய்கறிகள், கரும்பு, பூ, மக்காச்சோளம், வாழை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஏற்றி வருவதும ், இங்கிருந்து கர்நாடகா மாநிலம் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சத்தியமங்கலம் பகுதியில் இருந்து இயங்கும் லாரிகள் அனைத்தும் நாளை நள்ளிரவு முதல் கர்நாடகா மாநிலத்திற்கு இயக்கப்பட மாட்டாது எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

Show comments