Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோடு அருகே அரசு பேருந்து ஜப்தி!

ஈரோடு செ‌ய்‌தியாள‌‌ர் வேலு‌ச்சா‌‌மி!

Webdunia
ஈரோடு அருகே விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்காத காரணத்தால் அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம ், அந்தியூர் அருகே ராமகவுண்டன்கோட்டையை சேர்ந்தவர் கூ‌லி‌த் தொ‌ழிலா‌ளி முருகன் (45). இவர் கடந்த 2002 ம் ஆண்டு நவம்பர் மாதம் அப்பகுதியில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து மோதி ‌ நிக‌ழ்‌‌விட‌த்‌திலேயே இறந ்து போனா‌ர்.

பவானி விரைவு நீதிமன்றத்தில் நடந்து வ‌ந்த இ‌ந்த வழ‌க்‌கி‌ல் 2004 ம் ஆண்டு தீர ்‌ப் பளித்த நீதிபத ி, கோவை அரசு போக்குவரத்து கழகம் நஷ்டஈடாக ரூ.4 லட்சத்து 17 ஆயிரத்து 500 வழங்கவேண்டும் என தீர்ப்பளித்தது. ஆனால் கடந்த மூன்றாண்டுகள் ஆகியும் இதுவரை நஷ்டஈடு வழங்கவில்லை.

இதை‌த் தொட‌ர்‌ந்து இற‌ந்து போன ம ுரு க‌னி‌ன் மனைவி கவுசல்ய ா, பவா‌னி சா‌ர்பு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி மணிவேல ், ம ூன்று ஆண்டுகள் ஆகியும் ந‌ஷ்டஈடு வழங்கப்படவில்லை. ஆகவே வட்டியுடன் சேர்ந்து ரூ.6 லட்சத்து 66 ஆயிரத்து 886 கொடுக்கவேண்டும். இந்த தொகை கொடுக்கும் வரை கோவை கோட்டத்திற்குட்பட்ட அந்தியூர் அரசு பேருந்தை ஜப்தி செய்யுமாறு உத்தரவிட்டார்.

இதையடுத்து நேற்று மாலை அந்தியூரில் இருந்து கோவ ில ூருக்கு சென்ற அரசு பேருந்தை நீதிமன்ற பணியாளர்கள் சென்று ஜப்தி செய்தனர். ஜப்தி செய்யப்பட்ட பேருந்து பவானி விரைவு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments