Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.125.5 கோடி இழப்பீடு : கருணாநிதி!

பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.125.5 கோடி இழப்பீடு : கருணாநிதி!
, வியாழன், 25 செப்டம்பர் 2008 (09:37 IST)
கடந்த ஆண்டில் ஏற்பட்ட பயிர் சேதத்தை ஈடுகட்டும் வகையில் விவசாயிகளுக்கு மாநில அரசு சார்பில் ரூ.125.52 கோடி நஷ்டஈட்டுத் தொகையை வழங்கி முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

webdunia photoFILE
இது தொடர்பாக தமிழக அரசு ெளியிட்ட செய்திக்குறிப்பில், ''விவசாயிகள் சாகுபடி செய்த பயிர்கள் இயற்கைச் சீற்றத்தாலோ, பூச்சிகளாலோ, நோய்களினாலோ அழிந்து விடுமாயின், அதன் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, 2000-மாவது ஆண்டு கார் பருவத்திலிருந்து தமிழக அரசு செயல்படுத்திவரும் தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடாக தமிழக விவசாயிகளுக்குக் காப்புறுதியும், நிதியுதவியும் அளிக்கப்படுகிறது.

இத்திட்டத்தின்கீழ் 2007-ம் ஆண்டு சம்பா நெல் பருவத்தின்போது ஏற்பட்ட இயற்கைச் சீற்றங்கள் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் காப்பீடு செய்யப்பட்டு, சேதமடைந்த பயிர்களுக்காக விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய மொத்த இழப்பீட்டுத் தொகை 267 கோடியே 61 லட்சத்து 78 ஆயிரத்து 137 ரூபாயாகும். இத்தொகையை மாநில அரசும், மைய அரசும் சம அளவில் ஏற்கின்றன.

தமிழக விவசாயிகளின் நலனில் எப்போதும் மிகுந்த அக்கறை கொண்டுள்ள முதலமைச்சர் கருணாநிதி, விவசாயிகளுக்கு கடந்த ஆண்டில் ஏற்பட்ட பயிர் சேதத்தை ஈடுசெய்யும் வகையில், மாநில அரசின் பங்காக 125 கோடியே 52 லட்சம் ரூபாயை விடுவித்து தற்போது ஆணையிட்டுள்ளார்.

இந்த ஆணையைத் தொடர்ந்து மத்திய அரசு தனது பங்காக வழங்கிடும் தொகையையும் சேர்த்து ராமநாதபுரம் மாவட்டத்தில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 49 விவசாயிகளுக்கு 150 கோடியே 53 லட்சம் ரூபாய், சிவகங்கை மாவட்டத்தில் 67,631 விவசாயிகளுக்கு 57 கோடியே 73 லட்சம் ரூபாய், புதுக்கோட்டை மாவட்டத்தில் 38,528 விவசாயிகளுக்கு 14 கோடியே 93 லட்சம் ரூபாய்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 37,946 விவசாயிகளுக்கு 27 கோடியே 96 லட்சம் ரூபாய், திருவாரூர் மாவட்டத்தில் 16,382 விவசாயிகளுக்கு 11 கோடியே 80 லட்சம் ரூபாய் உட்பட மொத்தம் 2 லட்சத்து 84 ஆயிரத்து 740 ஏழை விவசாயிகளுக்கு 267 கோடியே 61 லட்சத்து 78 ஆயிரத்து 137 ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார் எ‌ன்று அரசு செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil