ஈரோடு வன மண்டலத்தில் 145 கிராமங்களில் காடுவளர்ப்பு திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மண்டல வனபாதுகாவலர் துரைராசு தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம ், சத்தியமங்கலம் வனக்கோட்டம் பவானிசாகர் சரகத்திற்குட்பட்ட காடுவளர்ப்பு திட்ட கிராமங்களை சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழுகளுக்கு கடன்வழங்கும் விழா காராச்சிகொரையில் நடந்தது. விழாவிற்கு வந்த அனைவரையும் சத்தியமங்கலம் வனசரகர் எம்.எஸ்.மணி வரவேற்றார்.
ஈரோடு மண்டல வனபாதுகாவலர் பி.துரைராசு தலைமை தாங்கி பேசுகையில ், தமிழக அரசு கூட்டு வனமேலான்மை திட்டத்தின் அடிப்படையில் வனபாதுகாப்பு கிராமங்கள் அமைத்து செயல்படுத்தி வருகிறது. கடந்த 1997ஆம் ஆண்டுக்கு முன் வனப்பகுதியில் அரசாங்கமே தனியாக திட்டம் அறிவித்து செயல்படுத்தியது. ஆனால் எதிர்பார்த்த அளவு இது வெற்றிபெறவில்லை.
webdunia photo
WD
இதனால் 1997ஆம் ஆண்டிற்கு பிறகு வனத்தை ஒட்டியுள்ள கிராம மக்களின் ஆலோசனைகள் மற்றும் கருத்துகள் கேட்டு திட்டமிடுதல், அந்த திட்டத்தை செயல்படுத்துதல், அதை பங்கீட்டுக் கொள்ளுதல் இவைகளை கண்காண ி த்தல் ஆகிய நான்கு கோட்பாடுகளின் அடிப்படையில் திட்டம் தீட்டி 1997ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை ஜப்பான் நாட்டின் நிதியுதவியுடன் முதல்கட்டமாக காடுவளர்ப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த திட்டம் மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கியதால் இதன் இரண்டாம் கட் ட ம ் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. மகளிர் முன்னேறினால் மட்டுமே ஒரு நாடு முன்னேறியதாக அர்த்தம். அதேபோல் வனகிராமங்களில் மகளிர் சுயஉதவி குழுக்கள் அமைக்கப்பட்டு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
என்னை பொருத்தவரை வனக்கிராமங்களில் இருக்கும் பெண்கள் நூறு விழுக்காட ு ஏதாவது ஒரு குழுவில் இருக்க வேண்டும். ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் அதாவது ஈரோடு மண்டலத்தில் 145 கிராமங்களில் இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது என்ற ு துரைராசு பேசினார்.
இதையடுத்து சத்தியமங்கலம் மாவட்ட வனஅதிகாரி எஸ்.ராமசுப்பிரமணியம் முன்னிலை வகித்து பேசினார். சுடர் தொண்டு நிறுவன செயலாளர் எஸ்.சி.நடராஜ் வாழ்த்துரை வழங்கினார். விழாவிற்கு பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் ஓ.சுப்பிரமணியம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பெண்களுக்கு கடனுதவி மற்றும் இலவச மரக்கன்றுகள் வழங்கி பேசினார்.
அவர் பேசும்போத ு, தற்போது மரங்கள் வளர்க்கபடாத காரணத்தால் தண்ணீர், காற்று மாசுபட்டுள்ளதாகவும ், இதனால் ஓசோன் மண்டலம் ஓட்டைவிழுந்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதை தடுக்க வனத்தை காக்கவேண்டும ். அத்தோடு மரங்கள் வளர்க்கவேண்டும் என்றார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ரேஞ்சர் மோகன் தலைமையில் வனத்துறையினர் செய்திருந்தனர். விழாவில் வ ன சரகர்கள் சிவமல்லு, வீரபத்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.