Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தகவ‌ல் பெறு‌ம் உ‌ரிமை‌ச் ச‌ட்ட‌ம்: த‌மிழக அரசு ‌விள‌க்க‌ம்!

Webdunia
செவ்வாய், 23 செப்டம்பர் 2008 (15:02 IST)
தகவ‌ல் பெறு‌ம் உ‌ரிமை‌ச் ச‌ட்ட‌த்‌தி‌ன் படி பெரும்பாலா ன வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள்தான் தகவல் கோரி விண்ணப்பித்து தகவலைப் பெற முயற்சிக்கிறார்கள ் எ‌ன்று‌‌ம் எனவேதான் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு விலக்களித்து உத்தரவிடப்பட்டுள்ளது எ‌ன்று‌ம் த‌‌மிழக அரசு ‌விள‌க்க‌ம் அ‌ளி‌த்து‌ள்ளது.

இது தொட‌ர்பாக த‌மிழக அரசு இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், “தகவல் பெறும் உரிமைச் சட்டம்”, லஞ்ச ஒழிப்புத்துறைக்குப் பொருந்தாது என தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது சரியல்ல என்று சில தம ி‌ழ் நாளேடுகள் தலையங்கம் எழுதியிருக்கின்றன.

தகவல் பெறும் உரிமைச் சட்டம் மத்திய அரசு இயற்றிய சட்டம். அந்தச் சட்டத்தில் மாநில அரசுக்குக் கொடுத்துள்ள அதிகாரத்தின்படி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்களித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.

லஞ்ச ஒழிப்பு சம்பந்தப்பட்ட வழக்குகளில் புலன் விசாரணை முடிந்து அரசு வழக்கு தொடுப்பதென முடிவு ச ெ‌ய ்வதற்கு முன்பு அவைபற்றிய தகவல்கள் வெளியே வருமானால், அது வழக்கின் போக்கை பெரிதும் பாதிக்கும்; மேலும் பெரும்பாலான நேர்வுகளில் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள்தான் தகவல் கோரி விண்ணப்பித்து தகவலைப் பெற முயற்சிக்கிறார்கள்.

எனவேதான் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு விலக்களித்து உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை முடிவடைந்து அரசுக்கு இறுதி அறிக்கை வந்த பிறகு அது பற்றிய தகவல்களை முறைப்படி பெற்றுக் கொள்ளலாம் எ‌ன்று த‌மிழக அரசு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments