Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தை 1ஆ‌ம் தேதி தமிழ்‌ப் புத்தாண்டு: அரசு உ‌த்தரவு செ‌ல்லு‌ம்! ‌‌நீ‌திம‌ன்ற‌ம் தீர்ப்பு

Webdunia
செவ்வாய், 23 செப்டம்பர் 2008 (10:34 IST)
தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக தமிழக அரசு அறிவித்தது செல்லும் என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ‌ தீ‌ர்‌ப்ப‌ளி‌த்து‌ள்ளது.

தூத்துக்குடி மாவட்டம ், திருச்செந்தூரை சேர்ந்த எஸ்.சிவசுப்பிரமணிய ஆதித்தன ், உய‌ர் ‌நீ‌திம‌ன்ற மதுரை‌க் ‌கிளை‌யி‌ல் தா‌க்க‌ல் செ‌ய்த மனு‌வி‌ல், கடந்த 13.4.2008 அன்று திருச்செந்தூரில் உள்ள சிவகொழுந்தீசுவரர் கோவிலில் தமிழ ்‌ப் புத்தாண்டு சிறப்பு பூஜை நடத்தவும், அன்றைய தினம் தமிழ ்‌ப் புத்தாண்டு கொண்டாட்டம் என்று ‌ விள‌ம்பர பலகை வைக்கவும் அனுமதிக்க வேண்டும் என்று இந்து அறநிலையத்துறை இணை ஆணையரிடம் மனு கொடுத்தேன்.

ஆனால் அவர் அனுமதி அளிக்க மறுத்து விட் டதோடு, தமிழ ்‌ப் புத்தாண்டை தை மாதம் 1 ஆ‌ம் தேதி தான் கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதாகவும், எனவே சித்திரை மாதம் 1 ஆ‌ம் தேதியை தமிழ ்‌ப் புத்தாண்டாக கொண்டாட அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

இதுபோன்று அதிகாரி தடுப்பது எங்களது அடிப்படை உரிமையில் தலையிடுவதாகும ். எனவே சித்திரை 1 ஆ‌ம் தேதி கோவிலில் தமிழ ்‌ப ் புத்தாண்டு சிறப்பு பூஜை நடத்த அனுமதி மறுத்த அதிகாரியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எ‌ன்று மனுவில் கூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

இந்த மனு ‌ விசா‌‌ரி‌த்த நீதிபதி கே.சந்துர ு,‌ மனுவை த‌ள்ளுபடி செ‌ய்து அ‌ளி‌த்த ‌தீ‌ர்‌ப்‌பி‌ல், சித்திரை 1ஆ‌ம் தே‌தி தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்பதற்கான ஆதாரத்தை மனுதாரர் தாக்கல் செய்யவில்லை. கோவிலின் பழக்கவழக்கம் சம்பந்தப்பட்ட ‌ வி டயங்களில் மனுதாரர் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளை சட்டப்படி அணுக வேண்டும். அவர்களை அணுகாமல் மனுதாரர் நேரடியாக நீதிமன்றத்தை அணுகமுடியாது.

புத்தாண்டை எல்லாத் தரப்பினரும் கொண்டாடுகின்றனர். இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என எல்லோரும் அவரவர் கோயிலுக்குச் சென்று வழிபடுகின்றனர்.

முற்காலங்களில் தமிழ் நாட்காட்டிகள் (காலண்டர்) மாற்றப்பட்டுள்ளன. எனவே தற்போது அரசு மாற்றி உள்ளது ஒன்றும் புதிதல்ல. அரசியல் சட்டப்படி அதுபோன்று மாற்றுவதற்கு அரசுக்கு உரிமை உள்ளது. அரசு ஒரு வல்லுனர் குழுவை அமைத்து மொத்தம் உள்ள 60 தமிழ் ஆண்டுகளின் சுழற்சியில் மாற்றம் கொண்டு வருவதற்கு ஆலோசனை கேட்கலாம்.

சித்திரை மாதத்தில் தமிழ் புத்தாண்டு கொண்டாடுவது இந்து மத வழிபாடுகளில் ஒரு பகுதி என்று மனுதாரர் தெரிவித்‌திருப்பது மதசாயம் பூசும் செயலாகும். மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என ‌நீ‌‌திப‌தி ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments