அஜீத் ரசிகர்கள் தான் வடிவேல் வீட்டை தாக்கினார்கள் என்று செய்தி வெளியானது. என்றாலும் என்னை இதில் சேர்த்தது தவறு. என் மீது நிறைய பொய் வழக்குகள் போடப்படுகிறது. தே.மு.தி.க. இளைஞர் அணி மாநாடு விரைவில் நடைபெற உள்ளது. அதை சீர்குலைக்கவே தற்போது இந்த வழக்கைப் போட்டுள்ளனர்.
மார்க்சிஸ ் ட ் கம்யூனிஸ ் ட ் செயலர் வரதராஜன் சமீபத்தில் என்னை சந்தித்து பேசினார். விஜயகாந்தை சந்தித்து பேசி விட்டார்களே என்ற ஆத்திரமும் என் மீதான வழக்குக்கு காரணமாக இருக்கலாம். நான் நேர் வழியில் மக்களை சந்திக்கிறேன். ஆனால் சிலர் குறுக்கு மனதுடன் குறுக்கு வழியில் என்னுடன் மோதுகிறார்கள்.
வடிவேல் புகார் தகவலை நான் பெரியதாக நினைக்கவில்லை. ஆனால் சிலர் பெரிதுபடுத்துகிறார்கள். 307-வது பிரிவின் கீழ் பதிவு செய்துள்ளனர். இப்படி வழக்கு போடுவதால் நான் பயந்து விட மாட்டேன ், அந்த வழக்கை சந்திப்பேன்.
வடிவேல் வழக்குக்காக நான் முன் பிண ை வாங்க மாட்டேன். இந்த வழக்குகள் சிறு பிள்ளைத்தனமானது என்ற ு விஜயகாந்த ் தெரிவித்தார ்.