'' சிறிலங்காவில் ஈழத்தமிழர்களுக்கு எதிரான தாக்குதலுக்கு மத்திய அரசு எந்தவித ராணுவ உதவியும் அளிக்கக்கூடாது'' என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
webdunia photo
FILE
நெல்லையில ் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறிலங்காவுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று மத்திய அரசு கூறி வந்தது. ஆனால், வவுனியா தாக்குதலில் இந்திய ரேடார் கருவிகள் சேதம் அடைந்ததுடன் 2 இந்தியப் பொறியாளர்களும் காயமடைந்துள்ளனர்.
சிறிலங்க ராணுவத்துக்கு ஆதரவாக மத்திய அரசு ஆட்களை அனுப்பி வைத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மத்திய அரசு சிறிலங்காவுக்கு எந்தவித ராணுவ உதவியையும் அளிக்கக்கூடாது. அளிக்கமாட்டோம் என்ற உறுதியை காப்பாற்ற வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக முதலமைச்சர் கருணாநிதி வலியுறுத்த வேண்டும். சிங்கள அரசுக்கு அவர்களுக்கு புரிகின்ற மொழியில் தமிழக முதல்வர் கண்டனம் தெரிவிக்க வேண்டும்..
ஒரு ரூபாய் அரிசி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நேரத்தில், பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஒரு ரூபாய் அரிசி திட்டம் மூலம், கடத்தல்காரர்களுக்கும் இடைத்தரகர்களுக்கும்தான் அதிக லாபம். மின்வெட்டால் தமிழகத்தில் நிலவும் இருட்டை விரட்ட ஒரு ரூபாய் அரிசி திட்டம் உதவாது.
தரமற்ற நிலக்கரியால்தான் அனல்மின் நிலையங்களில் முழு அளவில் உற்பத்தி நடக்காமல் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக நான் கூறியபோது, எம ். எம ். ட ி. சி சான்று அளித்த பிறகுதான் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவதாக முதல்வர் விளக்கம் கூறினார். ஒவ்வாரு முறையும் இறக்குமதி செய்யும்போது இந்த சான்று அளிக்கப்படுகிறதா என்பதை முதல்வர் விளக்க வேண்டும்.
மின் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் புதிய மின் நிலையங்கள் தொடங்க மின்துறை அமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மின்துறைக்கு முழு நேர அமைச்சரை நியமிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறினார்.