Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பால் உற்பத்தித் திட்ட‌த்‌தி‌ற்கு ரூ.11 கோடி அனும‌தி: கருணா‌நி‌தி உ‌த்தரவு!

Webdunia
புதன், 10 செப்டம்பர் 2008 (15:38 IST)
கிராமப்புற மகளிர் மேம்பாட்டிற்காக அண்ண ா நூற்றாண்டு விழா ஒருங்கிணைந்த பால் உற்பத்தித் திட்டத்தின் ‌கீ‌ழ ் முதற்கட்டமா க 5,000 கறவை மாடுகளை வழங்கிட ர ூ.11 கோடிய ை அனுமதித்து முதலமைச்சர் கருணா‌நி‌த ி உ‌த்தர‌‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக த‌மிழக அரசு இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், " 2008-2009ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் " பால் உற்பத்தியில் தமிழகம் முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது. பால் உற்பத்தியை மேலும் பெருக்கவும், பால் உற்பத்தி ச ெ‌ ய்யும் விவசாயக் குடும்பங்கள் கூடுதல் வருவ ா‌ ய் பெறும் வகையிலும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 10,000 உயர் கலப்பினக் கறவை மாடுகள் வழங்கும் புதிய திட்டம் ஒன்றை, ‌தி.மு.க. அரசு செயல்படுத்தும்.

த‌‌மிழக‌த்‌தி‌ல் பால் உற்பத்தி செ‌ய்ய‌த ் தகுந்த 200 கிராமங்களில், த‌மி‌ழ்நாட ு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையம் மூலமாக, வரும் 2 ஆ‌ண்டுக‌ளி‌‌ல் ரூ.22 கோட ி மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதனால் 5,000 மகளிர் பயனடைவர்”என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பின்படி கிராமப்புற மகளிர் மேம்பாட்டிற்காகப் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா ஒருங்கிணைந்த பால் உற்பத்தித் திட்டத்தின் ‌கீ‌ழ ் முதற்கட்டமாக கோவை, தஞ்சாவூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் 100 கிராமங்களில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 5,000 கறவை மாடுகளை வழங்கிட ர ூ.11 கோடியை அனுமதித்து முதலமைச்சர் கருணா‌நி‌த ி ஆணையிட்டுள்ளார்.

இப்புதிய திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 41,000 லிட்டர் பால் கூடுதலாக உற்பத்தி ச ெ‌ ய்யப்படும்" எ‌ன்ற ு கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments