Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேது ‌தி‌ட்ட‌ப்ப‌ணி‌க்கு இ‌ன்னு‌ம் ஒரு ‌மீ‌ட்ட‌ர் ஆழ‌ம் தா‌ன் தோ‌ண்ட வே‌ண்டு‌ம்: டி.ஆர்.பாலு!

Webdunia
திங்கள், 8 செப்டம்பர் 2008 (11:10 IST)
சேது சமுத்திர திட்ட பணி‌க்காக இதுவரை 11 மீட்டர் ஆழம் தோண்டப்பட்டு விட்டது எ‌ன்று‌ம் இன்னும் ஒரு மீட்டர் ஆழம் தான் தோண்டவேண்டும் எ‌ன்று‌ம் மத்திய அமை‌ச்ச‌ர் டி.ஆர்.பாலு கூ‌றினா‌ர்.

திருச்சியில் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்க ு பே‌ட்டிய‌ளி‌த் த அவ‌ர ், த‌மிழக‌த்‌தி‌ல ் நட‌ந்த ு வரு‌ம ் த‌ங் க நா‌ற்க ர சாலை‌‌ப ் ப‌ணிக‌ள ் அனை‌த்து‌ம ் முடிவடையு‌ம ் ‌ நிலை‌யி‌ல ் உ‌ள்ள ன. தே‌சி ய நெடு‌ஞ்சால ை எ‌ண்.7-ல் உள்ள பணகுடி முதல் கன்னியாகுமரி வரையிலான சாலை தவிர மற்ற அனைத்து 4 வழிச்சாலைகளும் வரு‌ம் டிசம்பர் 31ஆ‌ம் தேதிக்குள் போக்குவரத்துக்கு திறந்துவிடப்படும்.

இந்தியா முழுவதும் தங்க நாற்கர சாலை பணியை பொறுத்தவரை 5,846 கிலோ மீட்டரில் 181 கிலோ மீட்டர் தவிர மற்ற பணிகள் அனை‌த்து‌ம் 97 ‌விழு‌க்காடு வரை‌ முடி‌ந்து விட்டன.

ரயில்வே‌த்துறை பாலத்திற்கான வடிவமை‌ப்பை‌ப் போட்டு தருவதில் காலதாமதம் ஏற்படுவதா‌‌ல் ஒரு சில இடங்களில் ரயில்வே மேம்பால பணிகள் முடிவடையாத நிலையில் உள்ளன. இதனா‌ல் வரு‌ம் 12ஆ‌ம் தேதி இந்தியா முழுவதும் ரயில்வே பாலங்கள் அமைப்பதில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பது பற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெ‌ற உ‌ள்ளது.

மேலு‌ம், இந்தியா முழுவதும் 5,000 கிலோ மீட்டர் நீள சாலைகள் இருவழிச்சாலைகளாக மாற்றப்பட இரு‌க்‌‌கிறது. இந்த திட்டத்தின் கீழ் த‌‌மிழக‌த்த‌ி‌ல் 1,250 கி.மீ. நீள சாலை இருவழிச்சாலையாக மாற்றப்படு‌கிறது.

சேது சமுத்திர திட்ட பணிகள் சிறப்பாக நடந்து வருகின்றன. இதுவரை 11 மீட்டர் ஆழம் தோண்டப்பட்டு விட்டது. இன்னும் ஒரு மீட்டர் ஆழம் தான் தோண்டவேண்டும் எ‌ன்ற ு அமை‌ச்ச‌ர ் டி.ஆர்.பாலு கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments