Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேபிள் டி.வி. உ‌ரிமையாள‌ர்களு‌க்கு பாதுகா‌ப்பு: கருணாநிதிக்கு வரதராஜன் கடிதம்!

Webdunia
செவ்வாய், 2 செப்டம்பர் 2008 (10:20 IST)
கேபிள் டி.வி. உரிமையாளர்கள் தாங்கள் விரும்பும் நிறுவனத்திடம் சேனலை பெற்று, தொழில் செய்வதற்கு உரிய வாய்ப்பையும், பாதுகாப்பையும் வழங்க வேண்டும் எ‌ன்று மார்க்சிஸ்ட் கம ்ய ூனிஸ்‌ட் கட்சி பொதுச் செயலர் என்.வரதராஜன் முதலமைச்சர் கருணாநிதிக்கு கடித‌ம் எழு‌தியு‌ள்ளா‌ர்.

அ‌ந்த கடித‌‌த்‌தி‌ல், மதுரையில் பல கேபிள் டி.வி. ஆப்பரேட்டர்கள் மிரட்டப்படுவதாகவும், காவ‌ல்துறையினரால் கைது செய்யப்படுவதாகவும் கேபிள் டி.வி. ஆப்பரேட்டர்கள் நேரிலும், கடிதங்கள் மூலமும் தெரிவிக்கின்றனர்.

கேபிள் டி.வி. ஆப்பரேட்டர்கள் தாங்கள் விரும்பும் நிறுவனத்திடம் தொழில் ரீதியாக சேனலை பெற்று மக்களுக்கு ஒளிபரப்புவது அவர்களது உரிமை. இதில், இன்னொரு நிறுவனம் தலையிட்டு, தன்னுடைய நிறுவனத்தின் சேனல்களைத்தான் ஒளிபரப்ப வேண்டும் என்று வலியுறுத்துவது முறையாக இருக்காது.

இந்த பிரச்சினையில் காவ‌ல்துறை ஒரு சார்பாக செயல்படுகிற நிலைப்பாட்டையும் தாங்கள் கவனித்து நிவர்த்தி செய்திட வேண்டுகிறோம்.

எனவே, முதலமைச்சர் கருணாநிதி இந்த பிரச்சினையில் தலையிட்டு, கேபிள் டி.வி. உரிமையாளர்கள் தாங்கள் விரும்பும் நிறுவனத்திடம் சேனலை பெற்று, தொழில் செய்வதற்கு உரிய வாய்ப்பையும், பாதுகாப்பையும் வழங்க வேண்டும்.

மேலும், ஏற்கனவே தமிழக அரசு அறிவித்துள்ளது போல், உடனடியாக கேபிள் டி.வி. நிறுவனத்தை அரசே தொடங்கி நடத்த நடவடிக்கை எடுத்திட வேண்டும் எ‌ன்று கடிதத்தில் கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments