Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாவின் வாரிசுகளுக்கு ரூ.10 லட்சம் நிதி: கருணாநிதி வழங்கினார்!

Webdunia
செவ்வாய், 2 செப்டம்பர் 2008 (10:11 IST)
அண்ணாவின் வாரிசுகளுக்க ு ரூ.10 லட்சம் நிதியு த‌வியை முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி வழங்கின ார்.

இது தொட‌ர்பாக தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில ், அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது வழியில் நடக்கும் பாசறையாம் திராவிட முன்னேற்றக் கழகம் மறைந்த பேரறிஞர் அண்ணாவின் வாரிசுகள் மறைந்த தம்பி சி.என்.ஏ. பரிமளம் மற்றும் சி.என்.ஏ. இளங்கோவன், சி.என்.ஏ.கவுதமன், சி.என்.ஏ.பாபு ஆகியோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று கடந்த 30 ஆ‌ம் தேதி நடைபெற்ற தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது.

அதன் அடிப்படையில் முதலமைச்சர் கருணாநிதி மறைந்த சி.என்.ஏ. பரிமளத்தின் மகன்கள் மலர்வண்ணன், சவுமியன், மகள் இளவரசி ஆகியோரிடம் ரூ.10 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார். அதே போல் சி.என்.ஏ.இளங்கோவனுக்கும் முதலமைச்சர் கருணாநிதி ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

நிதியுதவியை பெற்றுக்கொண்ட மறைந்த சி.என்.ஏ.பரிமளத்தின் மகன்களும், மகளும் மற்றும் சி.என்.ஏ. இளங்கோவன் ஆகியோர் முதலமைச்சர் கருணாநிதிக்கு தங்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டனர ்'' எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

Show comments