Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் செ‌ப்ட‌ம்ப‌ர் 1ஆ‌ம் தே‌தி முத‌ல் டீ 4 ரூபாய்!

Webdunia
வெள்ளி, 29 ஆகஸ்ட் 2008 (09:57 IST)
சென்னையில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் டீக்கடைகளில் டீ 4 ரூபாயாக விலை உயர்கிறது.

த‌மிழக‌த்த‌ி‌ல் சமைய‌ல் எ‌ரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள் ளதா‌ல் சென்னையில் டீக்கடைக்காரர்கள் டீ, காபி விலையை செ‌ப்ட‌ம்ப‌ர் 1 ஆம் தேதி முதல் உயர்த்துகின்றனர்.

‘செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சிங்கிள் டீ 4 ரூபாய், காபி 5 ரூபாய்’ என்ற அறிவிப்பு பல டீக்கடைகளில் ஒட்டப்பட்டுள்ளது. இப்போது சென்னையில் சிங்கிள் டீ 3 ரூபாய். காபி 4 ரூபாய். வழக்கமாக 25 காசுகள்தான் உயர்த்துவார்கள். இந்த முறை ஒரு ரூபாய் உயர்த்துகின்றனர்.

இது பற்றி, சென்னை பெருநகர டீக்கடை உரிமையாளர்கள் சங்க செயலாளர் ஆனந்தன் கூறுகை‌யி‌ல், பெட்ரோல், டீசல், பால், சர்க்கரை விலை உயர்வால் டீக்கடை தொழில் நசுக்கப்படுகிறது. வர்த்தக எ‌ரிவாயு விலையும் மாதம்தோறும் கூடுகிறது. நஷ்டத்தை எங்களால் சமாளிக்க முடியவில்லை.

டீக்கடை வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. டீ விலையை உயர்த்த கடை உரிமையாளர்கள் சங்கத்தில் முறையிட்டு வருகின்றனர். சங்கம் சார்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனால், நஷ்டத்தை சமாளிக்க முடியாமல் நகர்ப் பகுதிகளில் இருக்கும் டீக்கடை உரிமையாளர்கள் தாங்களாகவே விலை உயர்வை அறிவித்துள்ளனர். நாங்களும் அதை ஆதரிக்கிறோம் எ‌ன்று ஆன‌ந்த‌ன் கூ‌றினா‌ர்.

சென்னையைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் டீ விலை உயரும் வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா வருகிறார் பிரிட்டன் மன்னர் சார்லஸ்.. புற்றுநோய்க்கு சிகிச்சையா?

இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

Show comments