Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 3-வது அணி: கம்யூனிஸ்‌ட்

Webdunia
ஞாயிறு, 24 ஆகஸ்ட் 2008 (12:14 IST)
தமி ழக‌த்‌தி‌ல் காங்கிரஸ ், பாரதீய ஜனதா கட்சிகள் இல்லாத 3-வது அணியை அமைப்போம் என்று கம ்யூ‌‌ னிஸ்டு கட்சிகள் அறிவித்து உள்ளன.

சென்னையில் கட‌ந்த இர‌ண்டு நா‌ட்களாக மார்க்சிஸ்ட் கம ்ய ூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட ்ட ‌தீ‌ர்மான‌த்‌தி‌ல், மார்க்சிஸ்ட் கம ்ய ூனிஸ்டு கட்சியும், இடதுசாரி கட்சிகளும் எடுத்துள்ள அரசியல் நிலைப்பாடுகள் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தவறான நடவடிக்கைகளுக்கு எதிர் வினையாக எழுந்தவை. இந்த பின்னணியை கவனத்தில் கொள்ளாமல் தமிழக அரசியல் நிலைமையை தனிமைப்படுத்திப் பார்ப்பது நடைமுறை சாத்தியமற்ற ஒன்று.

மார்க்சிஸ்ட் கம ்ய ூனிஸ்டு கட்சியை பொறுத்தவரை எந்த கட்டத்திலும் மதவாத பா.ஜ.க.வுக்கு ஆதரவான நிலையை மேற்கொண்டதில்லை என்பது மட்டுமல்ல. மத்தியில் அமைந்த காங்கிரஸ் அல்லாத ஆட்சிகளை பா.ஜ.க.வும ், காங்கிரசும் கைகோர்த்துத்தான் கவிழ ்‌த ்திருக்கிறார்கள் என்பது மு‌ந்தைய வரலாறு.

இப்போதும், வகுப்புவாத பா.ஜ.க.வுக்கு இடமளிக்கிற எந்த போக்கையும் மார்க்சிஸ்ட் கம ்ய ூனிஸ்டு கடைபிடிக்கவில்லை. தமிழகத்திலும், பா.ஜ.க., காங்கிரஸ் அல்லாத ஒரு 3-வது அண‌யியை முன்னெடுத்து செல்ல தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும்.

கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின் சட்டப்படியான கூலி ரூ.80 வழங்க வேண்டும ். ரெட்டணையில் துப்பாக்கி சூடு நடத்திய காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும ். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் போ‌ன்ற கோ‌ரி‌க்கைகளை வலியுறுத்தி ஆகஸ்டு 27 ஆ‌ம ் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று மாநில செயற்குழு தீர்மானித்துள்ளது.

விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டத்திற்கு தீர்வுகாண மாநில அரசு முழு கவனத்துடன் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் உ‌ள்‌ளி‌ட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்திய கம்யூனிஸ ்‌ட் முடிவு: இதேபோ‌ல், இந்திய கம ்ய ூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கடந்த 2 நாட்களாக நடந்தது. இந்த கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது.

‌ பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய மா‌‌நில செய‌ல‌ர் தா.பா‌ண்டிய‌ன், இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் ப‌ற்‌றி கூறுகை‌யி‌ல், "தி.மு.க.வினரால் காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொள்ள முடியும். ஆனால் எங்களால் அவர்களுடன் கூட்டணி வைத்து இருக்க முடியாது.

ஆகையா‌ல் நாங்கள் ‌தி.மு.க. கூ‌ட்ட‌ணி‌யி‌ல் இரு‌ந்து விலகி எங்கள் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய கூட்டணியை அமைக்க இருக்கிறோம். அதில் வெற்றி, தோல்வி பற்றி எங்களுக்கு எந்த வித கவலையும் இல்லை" எ‌ன்றா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments