Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செய்யூரில் அல்ட்ரா மின் உற்பத்தி திட்டம்: தமிழக அரசு உறுதி!

Webdunia
செவ்வாய், 5 ஆகஸ்ட் 2008 (18:57 IST)
தமிழகத்தில் செய்யூரில் அல்ட்ரா மெகா மின் உற்பத்தி திட்டத்தை தொடங்க மத்திய அரசிடம் தமிழக அரசு உறுதி செய்துள்ளது.

தமிழகம், மகாராஷ்டிரா, ஒரிசா மாநிலங்களில் தலா ஒரு அல்ட்ரா மெகா மின் உற்பத்தி நிலையம் அமைப்பதன் மூலம் 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இதற்கான பணிகள ், இதர மின் திட்டங்களை விரைவுபடுத்தும் வகையில் மத்திய மின்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தலைமையில் ட ில்லியில் உயர்நிலைக் கூட்டம் நடந்தது.

இ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ல் பே‌சிய த‌மிழக ‌மி‌ன்சார‌த் துறை அமை‌ச்ச‌ர் ஆ‌ற்காடு ‌வீராசா‌மி, தமிழகத்தின் செய்யூரில் அல்ட்ரா மெகா மின் உற்பத்தி திட்டத்தை தொடங்கலாம் என்று தெரிவித்தார். மேலு‌ம் கடலூரில் 2-வது அல்ட்ரா திட்டத்தை தொடங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். அதற்கான நிலம் பற்றிய விவரங்களை விரைவில் அனுப்புவதாகவும் கூ‌றின ார்.

12,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் நோக்குடன் தொடங்கப்படும் இத்திட்டங்களை முழு வீச்சில் செயல்படுத்துமாறு அ‌ப்போது அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments