Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலை பாதுகா‌ப்பு ‌வி‌ழி‌ப்புண‌‌ர்வு வாசக‌ம் அட‌ங்‌கிய அ‌‌ஞ்ச‌ல் அ‌ட்டை வெ‌ளி‌யீடு!

Webdunia
வெள்ளி, 1 ஆகஸ்ட் 2008 (17:31 IST)
சாலை ‌வி‌திகளை கடை‌ப்‌பிடி‌த்த‌ல் ம‌ற்று‌ம் சாலை பாதுகா‌ப்பு கு‌றி‌த்த ‌வி‌ழி‌ப்புண‌ர்வை பொதும‌க்க‌ளிட‌ம் ஏ‌ற்படு‌த்து‌ம் வாசக‌ம் அட‌ங்‌கிய அ‌‌ஞ்ச‌ல் அ‌ட்டையை போ‌க்குவர‌த்து‌த்துறை அமை‌ச்ச‌ர் கே.எ‌ன்.நேரு இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டா‌ர்.

சாலை பாதுகா‌ப்பு கு‌றி‌த்த ‌வி‌ழி‌ப்புண‌ர்வு பரவரலாக அனை‌த்து ம‌க்களு‌க்கு‌ம் செ‌ன்றடையு‌ம் வகை‌யி‌ல், அனை‌த்து தர‌ப்பு பொதும‌க்க‌ள் பய‌ன்பா‌ட்டி‌ல் உ‌ள்ள அ‌‌ஞ்ச‌ல் அ‌ட்டை‌யி‌ல் சாலை பாதுகா‌ப்பு வாசக‌‌ங்க‌ள் அ‌ஞ்ச‌ல் துறை மூல‌ம் 5 ல‌ட்ச‌ம் அ‌‌ஞ்ச‌ல் அ‌ட்டைக‌ளி‌ல் அ‌ச்சடி‌‌க்‌க‌ப்‌ப‌ட்டு அனை‌த்து மாவ‌ட்ட‌ங்‌க‌ளிலு‌ள்ள அ‌ஞ்ச‌ல் அலுவலக‌‌ங்க‌ள் மூல‌ம் பொதும‌க்களு‌க்கு ‌வி‌நியோ‌கி‌க்க‌ப்ப‌ட தயா‌ர் ‌நிலை‌யி‌ல் உ‌ள்ளது.

ப‌ல்வேறு துறை அலுவல‌ர்களை கொ‌ண்ட குழு‌க்க‌ள் அமை‌த்து அத‌ன் மூல‌ம் ‌விப‌த்துகளை, ‌விப‌த்து நட‌ந்த இட‌ங்களை ஆரா‌ய்‌ந்து உ‌யி‌ரிழ‌ப்பு ஏ‌ற்படு‌த்து‌ம் ‌விப‌த்து‌க‌ள் நடைபெறா வ‌ண்ண‌ம் தடு‌க்க தடு‌ப்பு நடவடி‌க்கை மே‌ற்கொ‌ள்ள அரசு ப‌ல்வேறு துறை அலுவ‌‌ல‌ர்களை கொ‌ண்ட குழுவை அமை‌த்து காவ‌ல், போ‌க்குவர‌த்து ம‌ற்று‌ம் நெடு‌‌ஞ்சாலை துறை ‌அ‌திகா‌ரிக‌ள் உ‌ள்ளட‌க்‌கி அமை‌த்து‌ள்ளது.

இ‌க்குழு ‌விப‌த்து நட‌ைபெறு‌ம் இட‌ங்களை ப‌ல்வேறு கோண‌ங்க‌ளி‌ல் கூ‌ர்‌ந்து ஆ‌ய்வு செ‌ய்து அத‌ன் மூல‌ம் ‌விப‌த்து‌க்க‌ளி‌ன் காரண‌ங்களை தீர ஆரா‌‌ய்‌ந்து அத‌ற்கான மூலகாரண‌த்தை க‌ண்ட‌‌றி‌ந்து ‌மிக‌ச்ச‌ரியான ப‌ரி‌ந்துறைகளை மாவ‌ட்ட மாவ‌ட்ட ஆ‌ட்‌‌சி‌த் தலைவ‌ர்களுக‌்கு அனு‌ப்‌பி மே‌ற்க‌ண்ட ஆ‌ய்வுக‌ள் மாவ‌ட்ட சாலை‌ப் பாதுகா‌ப்பு‌க் குழு‌வினரா‌ல் ‌விவாத‌த்‌தி‌ற்கு எ‌டு‌த்து‌க் கொ‌ள்ள‌ப்ப‌‌ட்டு உ‌ரிய தடு‌ப்பு நடவடி‌க்கை மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்டு வரு‌கிறது எ‌ன்று அரசு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments