Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை, நீலகிரி மாவட்ட சாலையை சீரமைக்க ரூ.7 கோடி: டி.ஆர். பாலு உ‌‌த்தரவு!

Webdunia
செவ்வாய், 29 ஜூலை 2008 (18:23 IST)
தமிழகத்தில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் ரூ.7 கோடி செலவில் திண்டுக்கல்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்த ு, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ட ி. ஆர ். பாலு அனுமதி வழங்கியுள்ளார்.

தமிழ்நாடு - கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலையாக திண்டுக்கல் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை (என்.எச்.209) விளங்குகிறது.

வாகனங்கள் அதிகளவில் சென்றதாலும், சமீபத்தில் பெய்த கன மழையாலும் இந்த நெடுஞ்சாலையின் பல பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட இடங்களில் சாலையை சீரமைக்க அனுமதி வழங ்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இதன்படி, என்.எச்-209 தேசிய நெடுஞ்சாலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஈச்சனாரி-ஆத்துப்பாலம் வரையிலான பகுதி ரூ.4.83 கோடி செலவில் சீரமைக்கப்படுகிறது. இதே நெடுஞ்சாலையில் நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் இந்திரா நகர் - பாசூர் வரையிலான பகுதி ரூ.2.25 கோடி செலவில் சீரமைக்கப்படுகிறது.

உடுமலைப்பேட்டை நகரில் புறவழிச் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயவும் முழு அளவில் ஆரா‌ய்‌ந்து பா‌ர்‌க் க ரூ.12 லட்சம் அனுமதி அளித்து மத்திய அமைச்சர் ட ி. ஆர ். பாலு உத்தரவிட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments