Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌மீனவ‌ர்க‌ள் கோ‌ரி‌க்கை வ‌லியுறு‌த்‌தி உ‌ண்ணா‌விரத‌ம் : ஜெயலலிதா!

Webdunia
செவ்வாய், 22 ஜூலை 2008 (15:30 IST)
தூண்டில் வளைவு திட்டத்தைக் கிடப்பில் போட்டது உள்ளிட்ட செயல்களைக் கண்டித்தும், மீனவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியு‌ம் நாக‌ர்கோ‌‌வி‌‌லி‌ல் வரு‌ம் 24ஆ‌ம் தே‌தி அ.இ.அ.‌தி.மு.க. சா‌ர்‌பி‌ல் உ‌ண்ணா‌விரத போரா‌ட்ட‌ம் நடைபெறு‌ம் எ‌ன்று அ‌க்க‌‌ட்‌சி பொது‌ச் செயல‌ர் ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ''க‌ன்னியாகுமரி மாவட்டம், தேங்காப்பட்டணம் மீன் பிடித்துறைமுகம் அமைப் பதிலும், சின்னமுட்டம் மீன் பிடித்துறைமுக வளர்ச்சிப் பணியிலும் தி.மு.க. அரசு கடந்த இரண்டு ஆண்டு காலமாக மெத்தனப் போக்கையே கடைப்பிடித்து வருகிறது.

மேலும் சுமார் 25 கோடி ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்பட்ட திட்ட மதிப்பீடுகள் குறித்து எந்தவிதமான நடவடிக்கையும் இரண்டு ஆண்டு காலமாக எடுக்கப்படவில்லை.

அதே தருணத்தில், கடலில் அடிக்கடி ஏற்படும் இயற்கை மாற்றம் காரணமாக மீன்கள் அதிகம் கிடைக்காததால், கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் வங்கிக் கடனை செலுத்த முடியாத சூழ்நிலையில் தற்போது இருக்கும்போது, அவர்களுடைய விசைப்படகுகள், வள்ளங்கள் ஆகியவற்றை நீதிமன்றம் மூலம் ஜப்தி செய்யும் நடவடிக்கையில் வங்கிகள் ஈடுபட்டிருப்பதை அரசு கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.

தேங்காப்பட்டணத்தில் மீன்பிடித் துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுக்காதது, சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் செய்யாதது, ஏற்கனவே தயாரிக்கப்பட்ட திட்ட மதிப்பீடுகளுக்கு நிதி ஒதுக்காதது, மீனவர்களின் விசைப்படகுகள், வள்ளங்கள் ஆகியவற்றை ஜப்தி செய்யும் நடவடிக்கையில் வங்கிகள் ஈடுபட்டிருப்பதைக் கண்டும் காணாமல் இருப்பது,

தூண்டில் வளைவு திட்டத்தைக் கிடப்பில் போட்டது உள்ளிட்ட செயல்களைக் கண்டித்தும், மீனவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், வருகின்ற 24ஆ‌ம் தேதி அ.இ.அ.‌தி.மு.க. சா‌ர்‌பி‌ல் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் உண்ணாவிரதப் போராட்டம் நட ைபெறு‌ம ்'' எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments